உலகையே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றுக்கான வேக்சின் கண்டுபிடித்துத் தயாரித்து உலக நாடுகளுக்கு அதிகளவில் விற்பனை செய்த 3 நிறுவனங்களான பைசர், பயோஎன்டெக், மாடர்னா ஆகிய 3 நிறுவனங்களுக்கும் ஒரு நொடிக்கு 74600 ரூபாய் லாபம் பெற்று வருகிறது.
கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அனைத்து நாட்டு மக்களுக்கும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கோவிட் வேக்சின் மிகவும் முக்கியமானதாக விளங்கி வரும் நிலையில் பைசர், பயோஎன்டெக், மாடர்னா ஆகிய 3 நிறுவனங்களின் வேக்சின் உலகளவில் மிகவும் முக்கிய வர்த்தகப் பொருளாக மாறியது. இதனால் இந்த 3 நிறுவனங்களுக்கு அதிகப்படியான வர்த்தகம் பெற்றுள்ளது.
இதே நேரத்தில் பல விமர்சனங்களையும் இந்த 3 நிறுவனங்களும் எதிர்கொண்டு உள்ளது.
மும்மூர்த்திகள்
பைசர், பயோஎன்டெக், மாடர்னா ஆகிய 3 நிறுவனங்களும் தாங்கள் தயாரிக்கும் பெரும் பகுதி வேக்சின்களைப் பணக்கார நாடுகளுக்கு அதிகளவில் கொடுத்துவிட்டு ஏழை நாடுகளுக்கு இன்னும் போதுமான வேக்சின்-ஐ கொடுக்காமல் உள்ளது என People's Vaccine Alliance (PVA) தனது சொந்த ஆய்வு மற்றும் கணக்குகளின் படி இதைக் கூறுகிறது.
34 பில்லியன் டாலர் லாபம்
2021ல் மட்டும் பைசர், பயோஎன்டெக், மாடர்னா ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து சுமார் 34 பில்லியன் டாலர் அளவிலான வரிக்கு முந்தைய லாபத்தைப் பெற்றுள்ளது என PVA அமைப்பு கூறியுள்ளது. இதன் மூலம் ஒரு நாளுக்கு 93.5 மில்லியன் டாலர், ஒரு நிமிடத்திற்கு 65,000 டாலர், ஒரு நொடிக்கு 1000 டாலர் வரையிலான லாபத்தைப் பெற்றுள்ளது.
2% மக்கள் மட்டுமே
ஒவ்வொரு மணிநேரத்திற்கும் மில்லியன் டாலர் கணக்கில் லாபத்தைப் பெறும் வேளையில், உலகின் ஏழை நாடுகளில் வெறும் 2 சதவீத மக்களுக்கு மட்டுமே வேக்சின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது என் ஆப்பிரிக்கன் அலையன்ஸ் மற்றும் பீப்பள் வேக்சின் அலையன்ஸ் ஆப்பிரிக்காவின் மாசா சியோம் தெரிவித்துள்ளார்.
மோனோபோலி ஆதிக்கம்
பைசர், பயோஎன்டெக், மாடர்னா ஆகிய 3 நிறுவனங்களும் வேக்சின் தயாரிப்பில் தனது மோனோபோலி ஆதிக்கத்தைப் பயன்படுத்து பணக்கார நாடுகளுக்கு அதிக லாபத்தைப் பெற வேண்டும் என்பதற்காக அதிகப்படியான வேக்சின்-ஐ கொடுத்துள்ளது. இதன் மூலம் ஏழை நாடுகள் வேச்சின் பெற முடியால் உள்ளது.
PVA அமைப்பு
ஏழை நாடுகளுக்குப் பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய இரு நிறுவனத்தின் மொத்த கோவிட் வேக்சின் தயாரிப்பில் 1 சதவீதத்திற்கும் குறைவான வேக்சின் மட்டுமே கொடுத்துள்ளது. மாடர்னா நிறுவனம் வெறும் 0.2 சதவீதம் மட்டுமே கொடுத்துள்ளது என PVA அமைப்பு தனது ஆய்வுகள் மூலம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏழை நாடுகளில் இன்னமும் 98 சதவீத மக்கள் வேக்சின் பெற முடியாமல் உள்ளனர்.
லாபம் வேண்டாம்
இதேவேளையில் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் கோவிட் வேக்சின்-ஐ லாபத்திற்கு விற்காமல் (not-for-profit) ஆர்டர் அடிப்படையில் கொடுக்கிறது. மேலும் இதை வரும் காலத்தில் நிறுத்திக்கொள்ளவும் முடிவு செய்துள்ளது.
வேக்சின் டெக்னாலஜி பகிர்வு
பைசர், பயோஎன்டெக், மாடர்னா ஆகிய 3 நிறுவனங்களுக்கு அரசு அமைப்புகளிடம் இருந்து 8 பில்லியன் டாலர் அளவிலான தொகை பெற்ற பின்பும் தனது வேக்சின் டெக்னாலஜியை WHO மூலம் ஏழை மற்றும் நடுத்தர வருமான ஈட்டும் பொருளாதார நாடுகளுக்கு அளிக்கவில்லை. இதைச் செய்திருந்தால் சப்ளை அதிகரிக்கப்பட்டு, குறைவான விலையில் வேக்சின் மக்களுக்குக் கிடைத்திருக்கும்.
மார்டனா
இதில் மார்டனா மட்டும் அமெரிக்கா அரசின் உத்தரவிற்குப் பின் தென் ஆப்பிரிக்காவில் mRNA ஹப்-ஐ அமைத்தது. இதன் மூலம் மார்டனா வேக்சின் உற்பத்தி பெரிய அளவில் அதிகரித்து அதிகளவில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது எனவும் PVA அமைப்பு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications