இந்திய ஐடி துறையில் மறக்க முடியாத முகம் பனீஷ் மூர்த்தி.. யார் இவர்..? இப்போது என்ன செய்கிறார்..?

நம் நாட்டில் மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனமாக ஐ.ஐ.டி.கள் விளங்குகின்றன. இங்கு படித்தாலே பெரிய பெருமையான விஷயம். இந்த கல்வி நிறுவனம் பல்வேறு மேதைகளை உருவாக்கி வருகிறது. இங்கு படித்தவர்கள் பலர் இன்று நாட்டின் பல பெரிய நிறுவனங்களை வழிநடத்தி வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் பனீஷ் மூர்த்தி.

இவர் ஒரு காலத்தில் இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை பார்த்த நிறுவனத்தை கையகப்படுத்திய ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து அந்த நிறுவனத்தை நடத்தியவர். சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பே அந்த நிறுவனத்தில் ரூ.45 கோடி சம்பளம் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பனீஷ் மூர்த்தியின் கேரியர் பல ஏற்ற இறக்கங்களை கொண்டதாக உள்ளது. அவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்திய ஐடி துறையில் மறக்க முடியாத முகம் பனீஷ் மூர்த்தி.. யார் இவர்..? இப்போது என்ன செய்கிறார்..?

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் பனீஷ் மூர்த்தி. இவர் தனது பள்ளி கல்வியை முடித்தவுடன் மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையில் பி.டெக் பட்டம் பெற்றார். அதன் பிறகு அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் பி.ஜி.டி.எம். நிறைவு செய்தார்.

1987ல் பட்டம் பெற்ற பிறகு சொனாட்டா சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். சுமார் 5 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றினார். அதன் பிறகு இன்போசிஸ் நிறுவனத்துக்கு மாறினார். அந்த நிறுவனத்தில் பல ஆண்டுகளில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தார். இந்த சூழ்நிலையில், அவருக்கு எதிராக 2 பெண்கள் வழக்கு தொடர்ந்ததையடுத்து, இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து அவர் வெளியேறினார்.

பின்பு ப்ரைமென்டர் மற்றும் க்விண்டன் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கினார். இருப்பினும் ஐகேட் குளோபல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் க்விண்டன் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதனையடுத்து 2003 ஆகஸ்டில் ஐகேட் நிறுவனத்தில் பனீஷ் மூர்த்தி இணைந்து தலைமை நிர்வாகியாக உயர்ந்தார்.

ஐகேட் நிறுவனத்தில் சேர்ந்தவுடன் அந்த நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்தார் மற்றும் பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை 122 கோடி டாலருக்கு வாங்கவும் உதவினார். பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸை ஐகேட் வாங்கியது போது அது அதனை காட்டிலும் 2 மடங்கு பெரியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் ஐகேட் நிறுவனத்தை இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது. இதனால் பனீஷ் மூர்த்தி புகழ் பெற்றார்.

நாராயண மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன் பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார் என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரியாத செய்தி. ஐகேட் நிறுவனத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்த பனீஷ் மூர்த்தி, பழைய நிறுவனத்தில் சந்தித்தது போல் மீண்டும் ஒரு குற்றச்சாட்டை எதிர்கொண்டார். அவருக்கு எதிராக ஒரு ஊழியர் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து ஐகேட் நிறுவனம் பனீஷ் மூர்த்தியை வேலையிலிருந்து நீக்கியது. ஐகேட் கார்ப்பரேஷனின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான பனீஷ் மூர்த்தி 2013ல் பணி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, 2012ல் அந்நிறுவனத்தில் அவரது சம்பளம் சுமார் ரூ.45 கோடியாக இருந்தது.

தற்போது அவர் பிரைமெண்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இந்நிறுவனம் உயர் வளர்ச்சியை ஊக்குவிக்க மூத்த நிர்வாகிகளுக்கு வழிகாட்டும் ஆலோசனை வழங்கும் நிறுவனமாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+