உலகின் மிகவும் பிரபலமான மற்றும் பழமையான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான பிலிப்ஸ் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் காரணத்தால் இன்று 4,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
உலகளவில் பல முன்னணி நிறுவனங்கள் ரெசிஷன் அச்சம், வர்த்தகம் மற்றும் லாபத்தில் சரிவு போன்ற பல்வேறு காரணத்தால் ஊழியர்களைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகிறது. இதில் பேஸ்புக், மைக்ரோசாப்ட் முதல் சிறு குறு நிறுவனங்கள் வரையில் அடக்கம்.
இந்த நிலையில் இந்த நீண்ட நெடிய பட்டியலில் பிலிப்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.
பிலிப்ஸ் நிறுவனம்
பிலிப்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான ராய் ஜேக்கப்ஸ் கூறுகையில் ஊழியர்களின் உற்பத்தித் திறன் மற்றும் பணியின் வேகத்தை மேம்படுத்துவதற்கான உலகளவிலான வர்த்தகத்தில் இருக்கும் சுமார் 4,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளோம்.
4000 ஊழியர்கள் பணிநீக்கம்
4000 ஊழியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்வது கடினமான விஷயமாக இருந்தாலும், அவசியமான முடிவாகத் தற்போது நிர்வாகம் நம்புகிறது. 4000 ஊழியர்கள் பணிநீக்கம் என்பதை இதை நாங்கள் இலகுவாக எடுத்துக் கொள்ள மாட்டோம், பாதிக்கப்பட்ட சக ஊழியர்களுக்கு ஏதுவான சலுகைகளை வழங்க உள்ளோம் என ராய் ஜேக்கப்ஸ் கூறினார்.
1.33 பில்லியன் யூரோ நஷ்டம்
பிலிப்ஸ் நிறுவனத்தின் உலகளவிலான வர்த்தகத்தில் இருக்கும் சுமார் 4,000 ஊழியர்கள் பணிநீக்கம் என்பது நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5 சதவீதத்திற்கும் அதிகமானது. செப்டம்பர் காலாண்டில் பிலிப்ஸ் 1.33 பில்லியன் யூரோ ($1.31 பில்லியன்) வரையிலான நிகர இழப்பை அறிவித்தது. இது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 2.97 பில்லியன் யூரோ லாபமாகப் பெற்று இருந்தது.
புதிய சிஇஓ ராய் ஜேக்கப்ஸ்
பிலிப்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாகக் கடந்த வாரம் தான் ராய் ஜேக்கப்ஸ் பொறுப்பேற்றார். இப்பதிவுக்கு வந்த பின்பு பல முக்கியமான இடத்தில் முதலீடுகளைக் குறைத்தார், அதேபோல் பல துறையில் செலவுகள், பணிகளைக் குறைத்து அதிக உற்பத்தி மற்றும் வேலைத் திறனை மேம்படுத்தியுள்ளார்.
செப்டம்பர் காலாண்டு முடிவுகள்
செப்டம்பர் காலாண்டில் பல முன்னணி நிறுவனங்கள் மோசமான லாபம் மற்றும் வருவாய் அளவுகளைப் பதிவு செய்துள்ளது, குறிப்பாக இந்தியாவில் விப்ரோ, ரிலையன்ஸ் O2C பிரிவு ஆகியவை லாபத்தில் சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பார்சூன் 500 நிறுவனத்தில் பல சந்தை கணிப்புகளைக் காட்டிலும் சரிவைச் சந்தித்தது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications