அமெரிக்காவின் மாபெரும் ரீடைல் வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான வால்மார்ட் இந்தியாவில் தனது வர்த்தகத்தைப் பிளிப்கார்ட் மூலம் விரிவாக்கம் செய்து வரும் நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான போன்பே டிஜிட்டல் பேமெண்ட் துறையில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செய்து வரும் நிலையில் தற்போது டிஜிட்டல் கோல்டு விற்பனையிலும் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
இந்தியாவில் இந்தப் பண்டிகை காலத்தில் பெருமளவிலான மக்கள் தங்களது ஷாப்பிங்-ஐ ஆன்லைனில் செய்து வரும் நிலையில், போன்பே தனது தங்க விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது.
இதன் வாயிலாகத் தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகை காலத்தில் (21 நாட்கள்) ஆன்லைன் தங்க விற்பனையில் சுமார் 6 மடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளது.
ஃபோன்பே
மக்கள் மத்தியில் டிஜிட்டல் பேமெண்ட் சேவையில் பெரிய அளவிலான நம்பிக்கையை ஏற்படுத்திய ஃபோன்பே மக்களை இத்தளத்தில் தங்கத்தை வாங்கவும் தூண்டியதோடு நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. இதனால் ஃபோன்பே தளத்தில் தங்கம் விற்பனை இந்த விழாக்காலத்தில் 6 மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது.
மக்கள்
சமீபத்தில் ஃபோன்பே தனது வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தங்கம் வாங்குவதை நினைவு செய்யும் வகையில் Notification-களைத் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளது. இதன் மூலம் மக்கள் ஃபோன்பே தளத்தில் இத்தகையைச் சேவை இருப்பதை உணர்ந்து விழாக்காலத்தில் அதிகளவிலான விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
1 ரூபாய்க்கு
ஃபோன்பே தளத்தில் 2017ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டிஜிட்டல் தங்க விற்பனை சேவை, இந்நிறுவன வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இத்தளத்தில் விற்பனை செய்யப்படும் தங்கம் அனைத்தும் safegold மற்றும் MMTC-PAMP தளத்துடன் இணைந்து விற்கப்படும் காரணத்தால் தங்கத்தின் தரம் மீது மக்களுக்கு எவ்விதமான சந்தேகமும் இல்லை.
வாடிக்கையாளர்கள்
இந்தியாவில் வர்த்தகம் செய்தும் பேமெண்ட் நிறுவனங்கள் அனைத்தும் பெரு நகரங்களைக் குறிவைத்து மட்டுமே வர்த்தகத்தை மேம்படுத்தி வரும் நிலையில் ஃபோன்பே ஆரம்பம் முதல் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் குறிவைத்து
வாடிக்கையாளர்களைச் சேர்க்க பணியாற்றி வருகிறது
இதனால் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் ஃபோன்பே நிறுவனத்திற்கு 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
டவுன் மற்றும் நகரங்கள்
இந்தப் பண்டிகை காலத்தில் ஃபோன்பே தளத்தில் சுமார் 18,500 பின்கோடில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்கத்தை வாங்கியுள்ளனர். இதில் 60 சதவீத வாடிக்கையாளர்கள் சிறிய டவுன் மற்றும் நகரங்களில் இருந்து வந்தவர்கள் எனப்
ஃபோன்பே தெரிவித்துள்ளது.
பேடிஎம்
இதேபோல் டிஜிட்டல் கோல்டு விற்பனையில் ஃபோன்பே நிறுவனத்தின் சகபோட்டி நிறுவனமான பேடிஎம் கடந்த 6 மாதத்தில் 2 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.இதேபோல நடப்பு நிதியாண்டில் பேடிஎம் தளத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாலும், ஆர்டர் மதிப்பு 60 சதவீதம் அதிகரித்துள்ளதாலும், இத்தளத்தில் 5,000 கிலோ தங்கத்தைப் பேடிஎம் விற்பனை செய்து அசத்தியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications