நவம்பர் மாத துவக்கத்தில் பிளிப்கார்ட் குழுமத்தின் கீழ் இயங்கும் இந்திய பேமெண்ட் சேவை நிறுவனமான PhonePe, சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்குத் தனது தலைமையகத்தை மாற்றி அமைத்துள்ளதாக அறிவித்தது.
இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது தலைமையகத்தைச் சிங்கப்பூரில் வைத்துள்ளது. இந்த நிலையில் இதன் பேமெண்ட் சேவை நிறுவனமான PhonePe மட்டும் தனது தலைமையகத்தை இந்தியாவிற்கு மாற்றியது ஏன்..?
இந்திய ஸ்டார்ட்அப்
பொதுவாக இந்திய ஸ்டார்ட்அப்கள் நிறுவனங்கள் வரி சலுகைக்காகவும், எளிய வர்த்தக விரிவாக்கத்திற்காகவும், புதிய முதலீடுகள் வேகமாகப் பெற வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருந்து சிங்கப்பூர்-க்குச் செல்லும். ஆனால் போன்பே தலைகீழாகச் செயல்பட்டு உள்ளதால் பல கேள்விகள் எழுந்துள்ளது.
போன்பே
இந்தியாவில் பங்குச் சந்தையில் பட்டியலுக்காக PhonePe நிறுவனம் தயாராகி வருவதால் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்குத் தனது தலைமையகத்தை மாற்ற வேண்டும் என்ற முடிவை எடுக்கப்பட்டதாகச் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
பிளிப்கார்ட்
PhonePe-ன் தாய் நிறுவனமான பிளிப்கார்ட் அதன் தலைமை அலுவலகத்தைச் சிங்கப்பூரில் வைத்துள்ளதால், இதன் வருடாந்திர முடிவுகளைச் சிங்கப்பூரில் தான் ஒவ்வொரு வருடமும் சமர்ப்பித்து வருகிறது. இந்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் 2021-22 ஆம் நிதியாண்டில் மட்டும் 7800 கோடி ரூபாய்க்கும் அதிக அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.
பிளிப்கார்ட் லாபம், வருவாய்
பிளிப்கார்ட் நிறுவனம் 2021-22 ஆம் நிதியாண்டின் நஷ்ட அளவு கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 46 சதவீதம் அதிகமாகும். ஆனால் பிளிப்கார்ட் -இன் நிகர வருமானம் 2021-22 ஆம் ஆண்டில் 20 சதவீதம் அதிகரித்துச் சுமார் 61,836 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த லாபம், வருவாய் அளவுகள் பிளிப்கார்ட் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் இண்டர்நெட் நிறுவனங்களின் இணைக்கப்பட்ட தரவுகள்
ஏன் சிங்கப்பூர்..?
ஹெரிடேஜ் அறக்கட்டளையின் பொருளாதாரச் சுதந்திர குறியீட்டில் சிங்கப்பூர் முதல் இடம், உலகப் பொருளாதார மன்றத்தின் சர்வதேச அளவில் போட்டி தன்மையில் சிங்கப்பூர் முதல் இடம், உலக வங்கியின் 2020 ease of doing business பட்டியலில் சிங்கப்பூர் 2வது இடம். இதை விட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு என்ன வேண்டும்.
இந்தியாவை விட வரிக் குறைவு
அனைத்திற்கும் மேலாகச் சிங்கப்பூரில் புதிய முதலீடுகளைப் பெற அதிக வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தியாவை விடக் கார்ப்ரேட் வரிக் குறைவு, சரக்கு மற்றும் சேவை வரிக் குறைவு, கேப்பிடல் கெயின்ஸ் வரி இல்லை, டிவிடெண்ட்-ஐ பங்குதாரர்களுக்கு அளிப்பதில் வரி இல்லை. இது அனைத்தும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சிங்கப்பூரில் தலைமையகத்தை அமைக்க முக்கியக் காரணமாக உள்ளது.
பிளிப்கார்ட் - வால்மார்ட்
பிளிப்கார்ட் சிங்கப்பூரில் தலைமையகத்தை வைத்துக்கொண்டு இந்தியாவில் வர்த்தகத்தைச் செய்தாலும் அதன் உரிமையாளர்
அமெரிக்காவின் மிகப்பெரிய ரீடைல் சாம்ராஜ்ஜியமான வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் துணை நிறுவனமாகும்.
சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால்
வால்மார்ட் 2018 ஆம் ஆண்டில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 77 சதவீத பங்குகளை வாங்கி அதிகாரத்தைக் கைப்பற்றியது மட்டும் அல்லாமல் பிளிப்கார்ட்-ன் நிறுவனர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் அடுத்த ஒரு வருடத்திற்குள் பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றி மொத்த நிர்வாகத்தையும் கைப்பற்றியது வால்மார்ட்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications