இனி சிங்கப்பூரில் ஃபோன்பே பயன்படுத்தலாம்... எப்படின்னு பாருங்க !

சிங்கப்பூர்: ஃபோன்பே, ஒரு ஆன்லைன் கட்டணச் செயலி ஆகும். இதன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் நாம் ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனைகள் எளிதில் செய்ய முடியும். தற்போது இந்த ஃபோன்பே, சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்துடன் (STB) கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியப் பார்வையாளர்கள் சுற்றுலா செல்லும்போது, ஃபோன்பே செயலியைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் உள்ள 8,000 வணிகர்களிடம் உடனடி மற்றும் பாதுகாப்பான முறையில் பணம் செலுத்த முடியும்.

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு நன்கு பழகிய கட்டண முறையை வழங்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. ஃபோன்பே போன்ற UPI பயன்பாடுகள், பணப் பரிவர்த்தனைகளை வசதியாகச் செய்வதற்கு நாடு முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆப்ஸை வங்கிக் கணக்குடன் இணைப்பதன் மூலம், QR குறியீடு மற்றும் PIN எண்ணைப் பயன்படுத்தி பணத்தை அனுப்பலாம். இந்த அம்சம் பல்வேறு வணிகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வாங்குவதையும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதையும் எங்கிருந்து வேண்டுமானாலும் எளிதாக செய்ய அனுமதிக்கிறது.

இனி சிங்கப்பூரில் ஃபோன்பே பயன்படுத்தலாம்... எப்படின்னு பாருங்க !

ஃபோன்பே வின் இன்டர்நேஷனல் பிசினஸின் CEO ரித்தேஷ் பாய், சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்துடன் சேர்ந்த இந்த முயற்சி ஃபோன்பே பயனர்களுக்கு பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் என்று குறிப்பிட்டார். மேலும், ஃபோன்பே பயனாளிகள் தீவு நகரங்களுக்குச் செல்லும்போது QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக பணத்தை செலுத்தலாம் எனக் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் பணம் செலுத்த ஃபோன்பே பயன்படுத்துவதற்கான முறைகள்

1. ஃபோன்பே ஆப் - ஐ உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்ய வேண்டும்.
2. ஃபோன்பே ஆப் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் ஆனபிறகு, உங்கள் வங்கிக் கணக்கை இந்த ஆப்பில் இணைக்க வேண்டும்.
3. UPI பரிவர்த்தனைகளைத் தொடங்க ஃபோன்பே ஆப் பயன்பாட்டைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் பங்குபெறும் வணிகர்கள் வழங்கிய QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
4. ஸ்கேன் செய்த பிறகு, கட்டணத் தொகை மற்றும் கூடுதல் விவரங்களை என்டர் செய்யவும்.
5. திரையில் காட்டும் தொகையை மதிப்பாய்வு செய்து, உங்கள் UPI பின்னை என்டர் செய்து கட்டணத்தை உறுதிப்படுத்தவும்.

UPI பரிவர்த்தனைகளுக்கு ஃபோன்பே ஆப் பயன்படுத்தும் போது, பயனர்களுக்கு கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், வங்கிகள் குறிப்பாக வெளிநாட்டில் பணம் செலுத்தும் போது, சர்வதேச பரிவர்த்தனைகள் அல்லது நாணய மாற்றத்திற்கான கட்டணங்களை வசூலிக்கலாம். இந்த கட்டணமும் அவ்வப்போது மாறுபடலாம்.

ஃபோன்பே ஆப் ஒரு நாளைக்கு 230 மில்லியன் ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்கிறது. இதன் டோடல் பெமென்ட் வேல்யூ (TPV) ஆண்டுக்கு USD 1.5 டிரில்லியன் ஆக உள்ளது. நீங்கள் ஃபோன்பே ஆப் - ஐ கொண்டு காப்பீடு வாங்கலாம், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யலாம், மேலும் இதன் மூலம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு பணம் செலுத்தலாம். இது எளிமையான மற்றும் நிறைய வசதிகளைக் கொண்டிருப்பதால், அனைவரும் பயன்படுத்தும் ஆன்லைன் கட்டான செயலியாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+