நாங்களும் இந்திய நிறுவனம் தான்: போன்பே சி.இ.ஓ சமீர் நிகாம் தகவல்

நாங்களும் இந்திய நிறுவனம் தான் என்றும், எங்கள் நிறுவனமும் இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்று என்றும், போன்பே நிறுவனத்தின் சிஇஓ சமீர் நிகாம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வால்மார்ட் நிறுவனத்தின் பிளிப்கார்ட்டிற்கு சொந்தமான இந்நிறுவனம் இந்தியாவில் பெங்களூரை தலைநகராகக் கொண்டு இயங்கி வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று பணம் செலுத்துதல் மற்றும் நிதி சேவை நிறுவனமாக கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும் போன்பே நிறுவனம் நாளுக்கு நாள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போன்பே

போன்பே

தற்போது போன்பே நிறுவனம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதனை இந்தியாவுக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், நாங்கள் இந்தியாவுக்கு எங்கள் நிறுவனத்தை மாற்ற முடிவு செய்து விட்டோம் என்றும், இந்தியாவில் தான் பட்டியலிடுவோம் என்றும் சிஇஓ சமீர் நிகாம் தெரிவித்துள்ளார்.

இந்திய நிறுவனம்

இந்திய நிறுவனம்

நாங்கள் இந்தியாவுக்காக சேவை செய்யும் நிறுவனம் என்றும், எங்கள் ஒவ்வொரு அலுவலகமும், தரவுகள் மையமும், பணியாளர்களும் இந்தியாவில்தான் உள்ளனர் என்றும், இந்திய சந்தையில் பணப்பரிவர்த்தனை சேவை செய்து வருகிறோம் என்றும் போன்பே சிஇஓ சமீர் நிகாம் தெரிவித்துள்ளார்.

பணப்பரிவர்த்தனை

பணப்பரிவர்த்தனை

2023-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் அனைத்து இடங்களுக்கும் போன்பே செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும், தற்போது மாதாந்திர பரிவர்த்தனையில் 47 சதவீத பங்குகளை போன்பே கொண்டு முன்னணியில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடின உழைப்பு

கடின உழைப்பு

எங்களது புதுப்புது முயற்சிகள் சந்தையில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்றும் நாங்கள் சேவை செய்ய வேண்டும் என்று மக்களும் விரும்புகிறார்கள் என்றும் சமீர் நிகாம் கூறினார். 2001-ஆம் ஆண்டு எங்கள் நிறுவனத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம் என்றும் 2020 ஆம் ஆண்டு 700 மில்லியன் டாலர்களை திரட்டிய பின்னர் விளம்பரதாரர்கள் பிளிப்கார்டு மூலம் 5.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள எங்கள் நிறுவனம், இந்த ஆண்டு டிசம்பரில் எங்கள் ஊழியரின் எண்ணிக்கை 5400 ஆக இரட்டிப்பாக்கும் இலக்கை கடக்க இருக்கிறது என்றும் சமீர் நிகாம் தெரிவித்தார்.

ஐபிஓ

ஐபிஓ

பேடிஎம், ஜொமைட்டோ, நயிகா உள்ளிட்ட நிறுவனங்கள் சமீபத்தில் ஐபிஓக்களை வெளியிட்டு தனித்து நிற்கும் நிலையில் எங்களது ஐபிஓவும் விரைவில் பட்டியலிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

செயல்பாடு

செயல்பாடு

சின்னச்சின்ன பெட்டிக்கடைகள், பிளாட்பார கடைகள் உள்பட பல கடைகளில் தற்போது பண பரிமாற்றத்திற்கான வசதியை போன்பே உள்ளிட்ட நிறுவனங்கள் செய்துள்ளன என்றும் ஒரு ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலே பிளாட்பார கடைகளில் கூட தற்போது பொருட்கள் வாங்கக் கூடிய நிலை உள்ளது என்றும் அதற்கு போன்பே உள்ளிட்ட நிறுவனங்களின் செயல்பாடு தான் காரணம் என்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+