வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமான PhonePe மத்திய அரசின் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் (ONDC) தளத்தில் கட்டமைக்கப்பட்ட அதன் நுகர்வோர் செயலியான பின்கோடை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் உள்ளூர் வர்த்தகத்தில் தனது பயணத்தை துவங்க உள்ளதாக PhonePe செவ்வாயன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. PhonePe நிறுவனர் மற்றும் CEO சமீர் நிகம் இப்புதிய Pincode செயலி குறித்து கூறுகையில் இச்செயலி முதலில் பெங்களூரில் உள்ள மக்களுக்கு மட்டும் கிடைக்கும்.
இந்த சோதனை பயன்பாட்டில் பெறும் கற்றல் உடன் தொடர்ந்து மேம்படுத்தி நாட்டின் பிற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்று சமீர் நிகம் தெரிவித்தார். பின்கோடு செயலியில் பெங்களூர் வர்த்தகத்தில் ஒரு நாளுக்கு சுமார் 10,000 பரிவர்த்தனைகள் நடந்த பிறகு நாட்டின் பிற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
PhonePe - Pincode
இந்தியாவின் மிகப்பெரிய பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமாக இருக்கும் PhonePe, இன்று Pincode என்ற ஷாப்பிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த Pincode செயலி மூலம் பெங்களூரில் மளிகை பொருட்கள், உணவு, மருந்து பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு அலங்கார பொருட்களை விற்பனை செய்யும்.
ONDC நெட்வொர்க்
மத்திய அரசின் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் (ONDC) தளத்தில் இருக்கும் அனைத்து ரீடைல் விற்பனையாளர்களும் Pincode செயலியில் சேர்ந்து தங்களுடைய பொருட்களை விற்பனை செய்யலாம் என honePe நிறுவனர் மற்றும் CEO சமீர் நிகம் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது செயலி
PhonePe துவங்கிய ஏழு ஆண்டுகளில் இரண்டாவது நுகர்வோர் செயலி Pincode என்று சமீர் நிகம் கூறினார். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் வித்தியாசமாக இருக்கும் என்பதால் தனி ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிகாம் கூறினார். Pincode செயலி அறிமுகம் மூலம் போட்டியை உருவாக்குவதை தாண்டி அரசின் ONDC நெட்வொர்க் சிறப்பாக பயன்படுத்த முடியும்.
முட்டுக்கட்டை
இந்திய சந்தையில் வெளிநாட்டு ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்குப் போட்டியாக மத்திய அரசு உருவாக்கும் டிஜிட்டல் வர்த்தகத் தளம் தான் இந்த ஒபன் நெட்வொர்க்கில் (ONDC). ONDC தளம் மூலம் ஆன்லைன் வர்த்தகத் தளத்தில் மோனோபோலியாக இகுக்கும் நிறுவனங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வேளையில் சிறு வியாபாரிகளுக்குப் புதிய வாய்ப்புகளும், வர்த்தகமும் கிடைக்கும்.
அமேசான், பிளிப்கார்ட்
Open Network for Digital Commerce என்பதன் சருக்கம் தான் இந்த ONDC, இத்தளத்தின் மூலம் சிறு ரீடைல் விற்பனையாளர்களையும் ஆன்லைன் விற்பனை தளத்திற்குக் கொண்டு வர முடியும், இதன் படிப்படிப்படியான வளர்ச்சி அமேசான், பிளிப்கார்ட் ஆதிக்கத்தைக் குறைக்கும், இந்திய நிறுவனங்களும், விற்பனையாளர்களும் அதிகப்படியான லாபம், வருவாய், வர்த்தகத்தைப் பெறுவார்கள்.
போன்பே வளர்ச்சி
போன்பே சமீபத்தில் தனது தலைமையகத்தை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றியது மட்டும் அல்லாமல், பிளிப்கார்ட் நிறுவனத்திடம் இருந்து தனி நிறுவனமாக வெளியேறியது. இதன் மூலம் வால்மார்ட் கீழ் இருக்கும் தனி நிறுவனமாக மாறியுள்ளது. இதன் பின்பு தனி முதலீட்டை திரட்டி அதன் மதிப்பை உயர்த்தி ஐபிஓ வெளியிட தயாராகும் வேளையில் புதிய வர்த்தக தளத்தை Pincode செயலி வாயிலாக துவங்கியுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications