கொழும்பு: இந்தியாவில் யூபிஐ பேமெண்ட்-ல் முடிசூடா மன்னனாக இருக்கும் PhonePe ஆப் தற்போது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. LankaPay உடன் கூட்டு சேர்ந்து இலங்கையில் PhonePe UPI பேமெண்ட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குச் செல்லும் போது, எளிதாக LankaPay QR குறியீட்டை ஸ்கேன் செய்து பேமெண்ட் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
PhonePe பேமெண்ட் செயல்முறை தற்போது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியர்கள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதை ஊக்குவிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டின் மூலம், இலங்கைக்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்கள் LankaPay QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். கையில் பணத்தை எடுத்துச் செல்லாமல், எக்ஸ்சேஞ்ச் ரேட் போன்ற காரணிகளை கணக்கிடாமல் பாதுகாப்பாகவும் விரைவாகவும் பணம் செலுத்த முடியும்.

நாணய மாற்று விகிதம் என்பது ஒரு நாட்டின் நாணயத்தை மற்றொரு நாட்டின் நாணயத்தில் மாற்றும் விகிதம் ஆகும். உதாரணமாக, அமெரிக்க டாலருக்கும் இந்திய ரூபாயுக்கும் இடையிலான மாற்று விகிதம் 1 USD = 75 ரூபாய் என்று இருந்தால், 1 அமெரிக்க டாலரை 75 இந்திய ரூபாயாக மாற்றலாம். இது சர்வதேச வர்த்தகம் மற்றும் சுற்றுலாவில் மிக முக்கியமானது. மாற்று விகிதங்கள் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மாறுபடுகின்றன.
எனவே, வெளிநாட்டிற்குப் பயணம் செய்யும்போது அல்லது சர்வதேச பரிவர்த்தனைகளில் ஈடுபடும் போது, நாணய மாற்று விகிதத்தை புரிந்துகொள்வது அவசியமாகும். பணத்தைக் கொண்டு உங்களுடைய பில்களைச் செலுத்தும் போது, இந்த மாற்று விகிதத்தினால், நீங்கள் குழம்பக்கூடும். அதற்கு உதவும் வகையில் தற்போது PhonePe பணப்பரிவர்த்தனையை எளிதாக்கியுள்ளது.
இதனால் நீங்கள் UPI மற்றும் LankaPay நேஷனல் பேமெண்ட் நெட்வொர்க் மூலம் எளிதாக பணம் செலுத்தலாம். பணத்தை எடுத்துச் செல்லாமல் நாணய மாற்றங்களைக் கணக்கிடாமல் பாதுகாப்பாகவும் விரைவாகவும் பணம் செலுத்த முடியும். LankaPay QR குறியீட்டை ஸ்கேன் செய்து பேமெண்ட் செய்த பிறகு, இந்திய நாணயத்தில் தொகை டெபிட் செய்யப்படும் மற்றும் மாற்று விகிதமும் உங்களுக்கு காண்பிக்கப்படும்.
இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகம் சார்ந்த பயணம் மேற்கொள்பவர்களுக்கு, இந்த புதிய அறிமுகம் உதவியாக இருக்கும். இதனை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம் என்று LankaPay CEO சன்னா டி சில்வா கூறியுள்ளார்.
PhonePe செயலி 2016ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. PhonePe டிஜிட்டல் பேமெண்ட் செயலியில் 520 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர், மற்றும் 38 மில்லியன் வணிகர்களுக்கு, உங்களால் இதன் மூலம் பேமெண்ட் செய்ய முடியும். தினசரி 230 மில்லியன் பணப்பரிவர்த்தனைகள் PhonePe செயலி மூலம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications