போன்பே அதன் வணிகங்கள் மற்றும் துணை நிறுவனங்களை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றுகிறது.
பெங்களூரினை தலைமையிடமாக கொண்ட பேமெண்ட் சர்வீசஸ் நிறுவனமான போன்பே, அதன் பணம் செலுத்துதல், உள்ளிட்ட பல நிதி வணிகங்களையும், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றுவதற்கான அனைத்து செயல்பாடுகளையும் முடித்து விட்டதாக தெரிவித்துள்ளது.
போன்பே பிரைவேட் லிமிடெட்
போன்பே குழுமத்தின் அனைத்து வணிகங்களும், தற்போது இந்தியாவில் போன்பே பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில், இந்தியாவிற்கு முழுமையாக சொந்தமான நிறுவனமாக மாறியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பணம் செலுத்தும் பேமெண்ட் செயலியானது, மூன்று செயல்பாடுகளின் மூலம் தனது செயல்முறையை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
என்னென்ன வணிகம்
போன் பே குழுமம் பண பரிமாற்ற சேவை மட்டும் அல்ல, இன்சூரன்ஸ் வணிகம் மற்றும் வெல்த் புரோக்கிங் சேவையினையும் வழங்கி வருகின்றது.
சமீபத்தில் போன்பே சமீபத்தில் புதிய பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தை (ESOP) உருவாக்கியது. இதன் மூலம் போன்பே குழுவின் 3,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை இடம்பெயர வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுபிஐ சேவை
போன்பே நிறுவனம் சமீபத்தில் வாங்கிய OSLabs pte ltd உரிமையையும் மாற்றியுள்ளது. இந்த கையகப்படுத்தலை ஜூலை 2022ல் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இது தவிர நிறுவனம் 2023ம் ஆண்டிற்குள் பொது பங்கு வெளியீட்டிற்கு செல்லவும் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது யுபிஐ பேமெண்ட் பரிமாற்றத்தில் 46.36% பங்கினை கொண்டுள்ளது.
வளர்ச்சி அடையலாம்
போன்பே-ன் இணை நிறுவனரும், CTO-வுமான ராகுல் சாரி, தொடர்ந்து நிறுவனம் அடுத்தடுத்து வணிகத்தினை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றது. 2026ம் ஆண்டுக்குள் 20%ல் இருந்து 65% ஆக வணிகம் வளர்ச்சி காணலாம் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications