இஸ்லாமாபாத்: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் பாகிஸ்தான் அரசு தங்களுக்கு சொந்தமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸை விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றது தெரியவந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் பல்வேறு நாடுகளிடமும் சர்வதேச அமைப்புகளிடமும் கடன் வாங்கி நாட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்சை தனியாருக்கு விற்பனை செய்வது என அந்நாட்டு அரசு முடிவெடுத்தது.

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏலத்தில் விடப்பட்டது அப்போது இதற்காக 306 மில்லியன் டாலர்கள் குறைந்தபட்ச ஏலத் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது . ஆனால் இந்த ஏலத்தில் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றது.
Blue World City என்ற நிறுவனம் இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஏலத்தில் பங்கேற்று வெறும் 36 மில்லியன் டாலர்களுக்கு இந்த நிறுவனத்தை ஏலத்தில் எடுக்க முன்வந்துள்ளது. இதன் மூலம் 60% பங்குகள் ப்ளூ வேர்ல்ட் சிட்டிக்கு செல்லும் என சொல்லப்பட்டது. இந்த ஏலத்தில் பங்கேற்க ஆறு நிறுவனங்கள் பதிவு செய்திருந்தன.
ஆனால் ஒரு நிறுவனம் மட்டுமே குறிப்பிட்ட தொகையை செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டது. இதனிடையே Blue World City நிறுவனத்தின் தலைவரான சாது நசீர் அரசு நிர்ணயித்த தொகை எங்களுக்கு தெரியும் ஆனால் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் தான் நாங்கள் 36 மில்லியன் டாலர்களை கூறுகிறோம் என தெரிவித்துள்ளார்.
ஏல அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தானின் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் ஐந்து சதவீதம் உயர்ந்து பின்னர் சரிவை கண்டது. பாகிஸ்தான் அரசு பல மாதங்களாகவே இந்த ஏர்லைன்ஸை தனியாருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது இருந்தாலும் யாரும் இதனை வாங்குவதற்கு முன்வரவில்லை. ஏற்கனவே இந்த நிறுவனத்திற்கு இருக்கும் கடன்களை அரசே ஏற்க வேண்டும், பழைய ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
பாகிஸ்தானுக்கு கடன் வழங்கிய சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய விட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது. இதன் அடிப்படையில் தான் பாகிஸ்தான் அரசு, ஏர்லைன்ஸை விற்பனை செய்வதற்கு முன் வந்துள்ளது.
பாகிஸ்தானில் நஷ்டத்தில் இயங்கக்கூடிய நான்காவது பெரிய அரசு நிறுவனம் இந்த ஏர்லைன்ஸ் ஆகும். இந்த விமான சேவை நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு எரிபொருளுக்கு கூட செலுத்த பணம் இல்லாமல் சில நாட்கள் தங்களுடைய விமானங்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்திருந்தது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications