நம் வாழ்வில் முன்பு அறியாமல் செய்த சில சம்பவங்கள் காமெடியாக முடிந்து இருக்கும். இப்போது அந்த சம்பவத்தை நினைத்தாலும் அது நமக்கு சிரிப்பை ஏற்படுத்தும். இன்று ஒருவர் பொது வெளியில் ஒருவர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யும் சில விநோதமான நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பலரது நகைச்சுவை உணர்வுகளை தட்டி எழுப்பி விடுகிறது. அந்த வகையில் ஒரு பழைய போட்டோ ஒன்று தற்போது சமூக ஊடகத்தில் வெளியாகி வைரலாகி பலரையும் நகைச்சுவையாக பேச வைத்துள்ளது.
முகுல் தேக்னே என்பவர் எக்ஸில், இந்த நபர் ஒரு சிறப்பு பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்ற தலைப்பிட்டு, ஏ.டி.எம். மையத்தில் உள்ளே ஒருவர் ஸ்கூட்டரில் இருந்தபடி பணம் எடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

அந்த நபர் ஸ்கூட்டரை வெளியே நிறுத்தாமல் நேராக ஏ.டி.எம். மையத்துக்குள் ஸ்கூட்டருடன் சென்று அதிலிருந்து நின்றபடி தனது கார்டை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்துள்ளார். இது பழைய படம் தான். இருப்பினும் இப்போது மீண்டும் வைரலாகி இணையம் முழுவதும் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தை பார்த்து பலரும் நகைச்சுவையாக கருத்தை பதிவு செய்துள்ளனர். அதில் ஒருவர், டிரைவ் இன் தியேட்டர், டிரைவ் இன் ரெஸ்ட்ராண்ட் அதே போல் டிரைவ் இன் ஏ.டி.எம். புதிய டிரெண்ட் என்று பதிவு செய்து இருந்தார்.
மற்றொருவர், வசதிகளை பயன்படுத்துவதில் அவருக்கு நோபல் மற்றம் வாகனம் ஓட்டுவதில் அவருக்கு ஆஸ்காரும் வழங்க வேண்டும் என பதிவு செய்து இருந்தார். மேலும் பலர், தனித்துவமான விருத்துக்கான பரிந்துரை. மன்னிக்கவும் அவருக்கு ஏ.டி.எம். ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். அசாதாரண செயல்களுக்கு பொருத்தமான விருதுகள் என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.
சமூக வலைதளங்களில் காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. எந்தவொரு சீரியசான சம்பவமாக இருந்தாலும் அதனை ட்ரோல் செய்து விடுகின்றனர். இதனை பார்த்து ரசிப்பதற்காகவே பலர் சமூக வலைதளங்களில் அடிக்கடி பார்த்து வருகின்றனர். இன்று அரசியல் பிரபலங்களை அதிகளவில் கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications