அமெரிக்கப் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழையும் என்ற அச்சம் அனைத்து தரப்பினரையும் பாதித்து வரும் வேளையில் புதன்கிழமை அந்நாட்டின் மத்திய வங்கி வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது.
இதனால் அமெரிக்காவின் நாணய புழக்கத்தில் கூடுதல் நெருக்கடி உருவாகும் வேளையில் சில நாட்கள் அமைதியாக இருந்த டெக் நிறுவனங்கள் மீண்டும் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிடத் துவங்கியுள்ளது.
இன்று உலகளவில் பிரபலமான ஆட்டோடெஸ்க் மற்றும் Pinterest ஆகிய நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு டெக் ஊழியர்களை மீண்டும் கலங்கடித்துள்ளது.
Pinterest பணிநீக்கம்
போட்டோ ஷேரிங் சோஷியல் மீடியா தளமான Pinterest நிறுவனம் தனது செலவுகளைக் குறைக்கும் விதமாக 150 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் Pinterest நிறுவனத்தில் மொத்தம் 5 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
Pinterest நிர்வாகம்
இதுகுறித்து Pinterest நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிறுவனத்தில் ஒருபக்கம் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் முக்கியமான இலக்குகளை அடைய வேண்டும் என்பதற்காக நிறுவனத்தில் பெரிய மாற்றத்தைச் செய்ய உள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் நீண்ட காலத் திட்டத்திற்கு அடித்தளம் அமைக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ள Pinterest 150 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
ஆட்டோடெஸ்க்
உலகளவில் பிரபலமாக இருக்கும் ஆட்டோடெஸ்க் தனது உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 250 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 2 சதவீதம் பேர் பாதிக்கப்பட உள்ளனர். ஆட்டோடெஸ்க் 2024 ஆம் ஆண்டுக்கான திட்டத்தில் முக்கியமான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது, இதற்காக முக்கியமான முடிவுகளை எடுக்கத் திட்டமிட்டு இருந்தது.
12,600 ஊழியர்கள்
இந்த 2024 ஆம் ஆண்டுக்கான திட்டத்தின் ஒரு பகுதியாக 12,600 ஊழியர்களை உலகளவில் வைத்திருக்கும் ஆட்டோடெஸ்க் தற்போது 250 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் போன்ற பணிநீக்கம் அறிவித்த முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் ஆட்டோடெஸ்க்-ம் இணைந்துள்ளது.
சேல்ஸ்போர்ஸ்
கடந்த மாதம் சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் 10 சதவீத ஊழியர்களை விரைவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்த நிலையில் கடந்த 30 நாளில் சேல்ஸ்போர்ஸ் நிர்வாகம் ஒவ்வொரு பிராந்திய அடிப்படையில் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்தப் பணிநீக்கம் மூலம் சுமார் 7000 ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சேல்ஸ்போர்ஸ் பணிநீக்க அறிவிப்புகள் ஐரோப்பாவை தாக்கியுள்ளது. மேலும் பல சேல்ஸ்போர்ஸ் ஊழியர்கள் ஏற்கனவே உலகளவில் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
FarEYE
இந்தியாவின் முன்னணி SAAS லாஜிஸ்டிக்ஸ் சேவை நிறுவனமான Fareye சுமார் 90 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. 8 மாதத்தில் 2வது முறையாகப் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது FAREYE, இந்தப் பணிநீக்க சுற்றில் டெக், ப்ராடெக்ட், HR, சேல்ஸ் ஆகிய பிரிவுகளில் இருந்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் FAREYE நிறுவனம் மைக்ரோசாப்ட் முதலீட்டில் இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications