இன்றைய இளம் தலைமுறையினர் மிகவும் துடிப்புடனும், மிகுந்த அறிவுடன் இருக்கும் வேளையில் பலர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை வைத்து இயங்கி வருகின்றனர்.
யூடியூப் வாயிலாக பல கோடி ரூபாய் ஒவ்வொரு வருடமும் சம்பாதிக்கும் பல குழந்தைகள் இருக்கும் வேளையில் இந்த 12 வயது சிறுமி ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்று மில்லியன் டாலர் சம்பாதிக்கும் நிலையில் 12 வயதில் ரிட்டையர்மென்ட் பெற முடிவு செய்துள்ளது.

இன்று Early Retirement என்பது மிகவும் பிரபலமாக இருந்தாலும் 12 வயதில் ஒரு இளம் தொழிலதிபர் ஓய்வு பெறுவது என்பது இணைய உலகை அதிர வைக்கும் செய்தியாகவே உள்ளது. யார் இந்த சிறுமி..? எப்படி மில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை பெறும் வர்த்தகத்தை உருவாக்கினார்..? வாங்க பார்ப்போம்.
ஆஸ்திரேலியாவில் பிறந்த 12 வயதான தொழிலதிபரான பிக்ஸி கர்டிஸ் (Pixie Curtis), தனது வளர்ந்து வரும் தொழிலில் இருந்து விலகி பள்ளியில் கவனம் செலுத்துவதாக அறிவித்துள்ளார். இதற்காக 11 வயது சிறுமி தனது 12வது பிறந்தநாளுக்கு தனக்கு விருப்பமான அனைவரையும் அழைத்து பர்த்டே பார்டி கொடுக்கும் கையோடு ஓய்வு பெறுவதையும் அறிவிக்க உள்ளார்.
2021ல் பிக்ஸி கர்டிஸ் தனது தாய் உடன் இணைந்து நிறுவனத்தை துவங்கினார், முதலில் bow-களை மட்டுமே விற்பனை செய்து வந்த அம்மா பொண்ணு ஜோடி மக்கள் மத்தியில் ஃபிட்ஜெட்ஸ் ஸ்பின்னர்-க்கு அதிக டிமாண்ட் இருப்பது தெரிந்துக்கொண்டு கொரோனா காலத்தில் வர்த்தகத்தை துவங்கினர். இந்த முயற்சி பெரிய அளவில் பலன் அளித்தது.
பிக்ஸி கர்டிஸ்-ன் பிஸ்னஸ் ஆரம்பம் முதலே பெரிய அளவில் பிரபலமான நிலையில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் இந்த 11 வயது சிறுமி ஒவ்வொரு மாதமும் 133,000 டாலர் தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் 1,09,40,546 ரூபாய் சம்பாதித்துள்ளார், இதன் மூலம் வர்த்தகம் துவங்கி சில வருடங்களில் மில்லியனராகியுள்ளார் பிக்ஸி கர்டிஸ்.
12 வயதில் பிக்ஸி கர்டிஸ் சொந்தமாக மெர்சிடிஸ் பென்ஸ் கார் வைத்திருக்கிறார். கர்டிஸ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கிஸ் சுமார் 1,40,000 பாலோவர்களை கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் பிக்ஸி கர்டிஸ் தனக்கு மட்டும் அல்லாமல் தன் குடும்பத்திற்கும் அதி ஆடம்பரமான வாழ்க்கை முறையை கொடுத்துள்ளார்.
பிக்ஸி கர்டிஸ் (Pixie Curtis) தனது பொம்மை நிறுவனமான பிக்ஸி ஃபிட்ஜெட்ஸ் (Pixie's Fidgets) தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இந்த பர்த்டே பார்டி மற்றும் ஓய்வு அறிவிப்பு நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் ரூ.4,112 அதாவது 50 டாலருக்கு மதிப்புள்ள ஸ்கின் கேர் பொருட்களை கிப்ட் ஆக கொடுக்க உள்ளார்.
இந்த கிப்ட் பேக்-ஐ ஆஸ்திரேலிய ஆடம்பர அழகு சாதன பொருட்கள் பிராண்டான MCoBeauty நிறுவனம் ஸ்பான்சர் செய்துள்ளது தான் முக்கியமான விஷயம். இதில் 6 பிரஷ் செட், ப்ரான்சிங் டிராப்ஸ், ஆறு 2-இன்-1 க்ளோ லிப் ட்ரீட்மென்ட் மற்றும் லிப் பாம் ஆகியவை அடங்கியது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications