பிசினஸ் உலகை விட்டுப் பிரிந்தபோது பலரும் ஏன் இப்படி செய்தார் என ஆச்சரியப்பட்டபோது இந்த 12 வயதான குழந்தை மில்லியனரான பிக்ஸி கர்டிஸ் மீண்டும் தொழில் உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்தார்.
ஓராண்டுக்கு முன்புதான் தனது ரிட்டயர்மெண்ட்டை பிக்ஸி கர்டிஸ் அறிவித்திருந்தார். தனது பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தப்போவதாக அப்போது காரணம் கூறியிருந்தார்.
தனது மைரியாட் (myriad) பிசினஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் இருப்பு காரணமாக பிரபலமான ப்ரி ஸ்கூலரான பிக்ஸி கர்டிஸ் மீண்டும் செயலில் இறங்கத் தொடங்கியுள்ளார்.

இளம் சிஇஓவான பிக்ஸியின் தொழில்களை அவரது தாய் பிஆர் மொகல் ராக்ஸி ஜாசென்கோ கவனித்து வந்தார். பிக்ஸியின் நிறுவனம் பிராண்டு டீல்கள் மற்றும் புரொமஷனல் வேலைகளைச் செய்து வருகிறது.
தனது 1 லட்சத்து 76 ஆயிரம் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை வைத்து பிக்ஸி இயங்கி வருகிறார். 2023இல் லைம்லைட்டில் இருந்து விலகிய பிக்ஸியின் மறுபிரவேசம் பலருக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
பிக்ஸியின் தாய் ராக்ஸி ஜாசென்கோ இந்த ஸ்வீட்டி பெட்டி (Sweaty Betty) என்ற பிஆர் நிறுவனத்தைத் தொடங்கினார். 15 வயதில் தான் ரிட்டயர்டு ஆகப்போவதாக பிக்ஸி தெரிவித்தபோதும் ஆன்லைனிலும் சிஇஓவாகவும் அவர் வெற்றி பெற்றார். தனக்குள் இருந்த தொழில்முனைவோர் வேட்கையை மீண்டும் உயிர்பெறச் செய்து பல்வேறு தயாரிப்புகளுக்கு எண்டார்ஸ்மென்ட் செய்து வருகிறார்.
நீங்கள் பின்னர் எனக்கு நன்றி தெரிவிக்கலாம் என்று பிக்ஸி சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு இரு பக்க உறிஞ்சும் ஆக்ஸசரியை விளம்பரப்படுத்தினார்.
தாய்-மகள் இருவரின் வெற்றிகரமான முயற்சிகளான Pixie's fidgets, மே 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 48 மணி நேரத்துக்குள் விற்றுத் தீர்ந்துவிட்டன. Pixie's Bows, ஒரு குழந்தையாக இருந்தபோது பிக்சியின் பெயரில் நிறுவப்பட்ட ஹேர் ஆக்சஸரி பிசினஸ் ஆகும்.
திரைக்குப் பின்னால், வணிக உலகில் பிக்ஸியின் பயணம் எப்போதும் சீராக இல்லை. பிக்ஸிக்கும் அவரது தாயாருக்கும் இடையே பிசினஸ் ஷெட்யூல்கள் தொடர்பாக மோதல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல பொறுப்புகளை நிறைவேற்றாமல் தான் சோர்வாக இருப்பதாக பிக்ஸி கூறியதால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பிக்ஸி சோர்வடைந்து விட்டதாக உணர்ந்ததை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து தனது கல்வியில் கவனம் செலுத்த விரும்புவதாகவும், இடைவிடாத தொழில்முனைவோர் பயணத்தில் இருந்து ஒரு படி பின்வாங்கவும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
பிக்சி சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்டுவதற்கான வயதை எட்டுவதற்கு இன்னும் பல வருடங்கள் இருந்தாலும், தனது சொகுசு கார் சேகரிப்பை விரிவுபடுத்துவதில் ஈடுபட்டார்.
அவரது 10 வயது சகோதரர் ஹன்டர் மற்றும் தொழிலதிபர் தந்தை ஆலிவர் கர்டிஸ் உட்பட அவரது குடும்பத்தினர், ஆலிவரின் பணி கடமைகளைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்தனர். மாற்றத்துக்கான தயாரிப்பில் ராக்ஸி தனது பல வணிகங்களை விற்ற பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிட்னியில் உள்ள கிரவுன் டவர்ஸ் ஹோட்டலில் தனது நண்பர்களுக்கு ஆடம்பரமாக தங்குவதற்கு முன் ஆடம்பரமான பிறந்தநாள் விழாவை நடத்தி, தனது ஆஸ்திரேலிய உறவுகளிடமிருந்து விடைபெற்றார் பிக்ஸி.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications