மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இந்திய ஐடி துறை மீது மிகப்பெரிய நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். NITI ஆயோக் வெளியிட்ட "Reimagination Ahead" என்ற அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், "இந்திய ஐடி சேவைத் துறை மிகவும் வலிமையானது - இது ஒருபோதும் அழியாது" என்று தெளிவாகக் கூறினார்.
பங்குச் சந்தையில் ஐடி பங்குகள் கடுமையாக சரிந்து வரும் நிலையில் இந்த அறிக்கை முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.

ஐடி நிறுவனங்கள் எதிர்காலத்திற்கு தயார்
பியூஷ் கோயல் கூறுகையில், இந்திய ஐடி நிறுவனங்கள் தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறியுள்ளன. AI, கிளவுட், டிஜிட்டல் மாற்றம் போன்ற புதிய தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்தி வருகின்றன என கூறினார். "மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை புதுப்பித்துக் கொள்ளாத நிறுவனங்கள் மட்டுமே சிரமத்தை சந்திக்கும்" என்று எச்சரித்த அவர், "ஐடி துறைக்கு எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது" என்று வலியுறுத்தினார்.
ஐடி பங்குகளை வாங்க நல்ல நேரம்!
அதிக பணம் உள்ள முதலீட்டாளர்களுக்கு ஐடி துறை பங்குகளை வாங்குவதற்கு இது சிறந்த வாய்ப்பு என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் பரிந்துரைத்தார். "இப்போது ஐடி பங்குகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன - இது முதலீடு செய்ய நல்ல சந்தர்ப்பம்" என்று கூறினார். இந்த அறிவுரை ஐடி பங்குகள் கடுமையாக சரிந்து வரும் நிலையில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடி பங்குகள் ஏன் சரிகின்றன?
நேற்று முதல் ஐடி பங்குகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. Infosys, Wipro உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 5%க்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. Nifty IT இன்டெக்ஸ் 10 மாத குறைந்த அளவை நெருங்கியது. முதலீட்டாளர்கள் புதிய AI சேவைகள் ஒரு அலுவலகத்தில் பெரும்பாலான சேவைகளை தானாக செய்யக்கூடிய திறன் கொண்டாக உருவெடுத்திருக்கும் வேளையில் காலம் காலமாக உலகளாவிய நிறுவனங்களுக்கு பல தரப்பட்ட ஐடி சேவைகளை வழங்கி வரும் ஐடி நிறுவனங்களை பாதிக்கும் என்ற அச்சத்தில் விற்பனை செய்து வருகின்றனர். அமெரிக்காவில் வட்டி விகித குறைப்பு தாமதமாகும் என்ற எதிர்பார்ப்பும் டாலர் மதிப்பில் வருமானம் ஈட்டும் அனைத்து நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா AI உச்சி மாநாடு விரைவில்
பியூஷ் கோயல்-ன் India AI Impact Summit 2026-க்கு சில நாட்களுக்கு முன் தெரிவித்துள்ளது, இந்திய ஐடி சேவை துறைக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. பிப்ரவரி 16 முதல் 20 வரை டெல்லியில் நடைபெறும் இந்த உச்சி மாநாடு இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிகழ்வாக இருக்கும்.
உலகெங்கிலும் உள்ள டெக் நிறுவன தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொள்வர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பிப்ரவரி 19 அன்று மாநாட்டை தொடங்கி வைப்பர். இந்த மாநாடு இந்தியாவை உலக AI வளர்ச்சியில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பியூஷ் கோயலின் இந்த நம்பிக்கை அறிக்கை ஐடி துறையில் பணியாற்றும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. AI-ஐ எதிரியாக பார்க்காமல் அதை தொழில்நுட்பமாக ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டிய நேரம் இது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications