இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில், உலக வர்த்தகக் அமைப்பின் (WTO) தலைமை இயக்குநர் "Ngozi Okonjo-Iweala" அவர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தியா மற்றும் ஐரோப்பாவில் 4 முக்கிய நாடுகள் உடன் ஃப்ரீ டிரேட் ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகியது. இந்நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பில் (EFTA) ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், சமீபத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் உடனான ஒப்பந்தத்தின் மூலம் புதிய பணிகளை முன்னெடுத்துச் செல்வதாகும்.
EFTA என்றால் என்ன?: EFTA என்பது ஆங்கிலத்தில் "European Free Trade Association" என்பதன் சுருக்கம். இது சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன் ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு வர்த்தகக் கூட்டமைப்பு.
இந்த நாடுகள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரிகளை நீக்கி, பிற நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக ஒன்றிணைந்துள்ளன. எளிமையாகச் சொல்வதானால், EFTA நாடுகள் ஒன்றுக்கொன்று தங்கள் பொருட்களை சுங்கக் கட்டணம் இல்லாமல் வர்த்தகம் செய்து கொள்ள அனுமதிக்கின்றன. இதன் மூலம், வர்த்தக செலவுகள் குறைந்து, பொருட்களின் விலைகள் மலிவாகின்றன.
சுங்க வரி என்பது இறக்குமதி, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி ஆகும். இது பொதுவாக அரசாங்கத்தால் விதிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரி, வெளிநாட்டுப் பொருட்களின் விலையை உயர்த்தி, உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காப்பாற்றுவதற்கு விதிக்கப்படலாம். ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரி, அரசாங்கத்திற்கு வருவாயை ஈட்டுவதற்காக விதிக்கப்படலாம்.
இந்தியா மற்றும் EFTA இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும், இந்த முதலீடுகள் மூலம் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் EFTA உறுதிபூண்டுள்ளது.
தங்கள் சந்திப்பின் போது, பல்வேறு பன்னாட்டு வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் அண்மையில் நடந்த உலக வர்த்தகக் கழக அமைச்சர்கள் மாநாடு குறித்தும் அவர்கள் கலந்துரையாடியுள்ளனர். இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு தருவதாக அமைச்சர் கோயல் உறுதிபடுத்தினார்.


Click it and Unblock the Notifications