இந்தியாவின் சிலிக்கான் வேலியாக அறியப்படும் பெங்களூர் தான் தற்போது அதிகப்படியான ஸ்டார்ட்ப் நிறுவனங்களையும், ஜிசிசி நிறுவனங்களை வைத்து நாட்டின் மென்பொருள் ஏற்றுமதிக்கும் - ஐடி சேவைக்கும் ஹப் ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் புதிய சிலிக்கான் வேலி ஒன்றை உருவாக்க வேண்டும் என மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இவருடைய பேச்சு பெங்களூர் மக்களையும், டெக் துறை ஊழியர்களையும் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல் , புதிய தொழில்நுட்ப நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற முக்கியமான திட்டத்தை அவையில் முன்வைத்தார். "பெங்களூரு இந்தியாவின் சிலிக்கான் வேலி என்பது நாம் அறிவோம். ஆனால், அதற்கு அப்பால் செல்ல வேண்டும். நாம் நமது சொந்த சிலிக்கான் வேலியை உருவாக்க வேண்டும்.

இதற்காக தேசிய தொழில்துறை வழித்தடம் மேம்பாட்டு நிறுவனம் (NICDC) உடன் இணைந்து நாட்டின் தொழில்முனைவோர், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இன்னோவேட்டார்ஸ் மற்றும் வழக்கத்தை மாற்றும் திறன் கொண்டு நிறுவனங்களான Disruptors-காக முழுமையான புதிய நகரத்தை உருவாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
இந்தியாவில் புதிய தொழில் நகரங்களை உருவாக்கும் நேஷ்னல் இண்டஸ்ட்ரீஸ் காரிடார் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு தற்போது NICDC அமைப்பிடம் உள்ளது. NICDC அமைப்பின் தலைமையில் அமைக்கப்படும் புதிய தொழில் நகரம், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை உருவாக்கி, அவர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது.
பியூஷ் கோயல் கூறும் இந்த புதிய சிலிக்கான் வேலி சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படலாம் என பரிந்துரைத்தார். "நாம் ஒரு டெக் சமூகத்தை 200 அல்லது 100 அல்லது 500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கி, இதை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்படும் பிரத்தியேகமான இடமாக மாற்ற முடியுமா? ஒரு கேள்வி எழுந்தாலும், இந்தியாவின் உண்மையான திறன் தெரியாத நபர்கள் இத்தகைய கட்டமைப்பு கொண்ட இடத்திற்கு வர முடியும். ஒரு காலத்தில் இந்திய மக்களும், உலக நாட்டினரும் கண்ணை மூடிக்கொண்டு மும்பைக்குச் சென்றது போல இது இருக்கப்போகிறது" என அவர் கூறினார்.
உலகளவில் இந்தியா மிகப்பெரிய மற்றும் மிகவும் வலுவான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கொண்டுள்ள நாடாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 2024 நிலவரப்படி, 1.4 லட்சத்திற்கும் அதிகமான DPIIT அங்கீகாரம் பெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. இதேவேளையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பை மேம்படுத்த மத்திய அரசு BHASKAR என்ற போர்ட்டலை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications