இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகள் மத்தியிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மூலம் ஆஸ்திரேலியா-வின் 100 சதவீத வரி விதிப்புகள் மொத்தமாக நீக்கப்படும் என மத்திய காமர்ஸ் மற்றும் தொழிற்துறை அமைச்சரான பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இரு நாடுகள் மத்தியிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகள் மத்தியிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மூலம் பல துறைகளின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் உதவும் எனக் கூறியுள்ளார்.
முக்கியத் துறை
இரு நாடுகள் மத்தியிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மூலம் டெக்ஸ்டைல், நவரத்தினம் மற்றும் நகைகள், பார்மா ஆகிய துறைகளுக்கு பெரும் நன்மை அளிக்கக் கூடும், மேலும் இந்தியாவில் இந்த ஒப்பந்தம் வாயிலாக மட்டுமே சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் பியூஷ் கோயல்.
இந்திய சேவை துறை
இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய சேவை துறையில் அதிகப்படியான மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்க வழிவகுக்கும். இதோடு மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் பணியாற்ற தற்போதைய அளவை காட்டிலும் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1800 பேருக்கு விசா
இதேபோல் வருடாந்திர அடிப்படையில் யோகா ஆசிரியர்கள் மற்றும் செஃப் ஆகியோருக்கு சுமார் 1800 பேருக்கு விசா வழங்கும் திட்டத்தையும் இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் கிடைக்க உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா மத்தியிலான இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளின் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பைக் கட்டுகிறது. இதன் மூலம் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை உறுதி செய்துள்ளது.
கையெழுத்து
இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகள் மத்தியிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஏப்ரல் 2, 2022 ல் இரு நாடுகள் மத்தியில் கையெழுத்தானது. தற்போது இந்த ஒப்பந்தம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அதை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஆஸ்திரேலியா - சீனா
ஆஸ்திரேலியா - சீனா மத்தியிலான வர்த்தகத் தகராறு இருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்குக் கூடுதல் நன்மை கிடைக்க உள்ளது. மேலும் குவாட் நாடுகளின் பட்டியலில் இருக்கும் நிலையில் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மத்தியிலான சப்ளை செயின் மற்றும் வர்த்தகம் பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்து இரு நாடுகளுக்கும் நன்மை அளிக்க உள்ளது.
ஏற்றுமதி நிறுவனங்கள்
இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருக்கும் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆஸ்திரேலிய சந்தைக்குத் தேவையான பொருட்கள் எனத் தனியாகப் பட்டியலிட்டு அதற்காகப் பணியாற்ற வாய்ப்பும் உள்ளது. சமீபத்தில் திருப்பூர் டெக்ஸ்டைல் ஏற்றுமதியாளர்கள் பொருளாதார மந்த நிலை காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய சந்தையில் இருந்து தனது வர்த்தகத்தை ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் UAE நாடுகள் மத்தியில் திருப்ப முடிவு செய்தது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications