இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதன் அடிப்படையில் உருவாகின்றன என்பது குறித்து தனது கருத்தை வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரான பியூஸ் கோயல் தெரிவித்திருக்கிறார். இந்தியப் பொருளாதாரத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு மற்றும் அதன் தாக்கம் என்ன? என்பது குறித்தும், ஸ்டார்ட் அப் துறையில் புதிய மாற்றங்கள் வரவில்லை என்றும் பல கருத்துக்களை பியூஸ் கோயல் முன்வைத்துள்ளார்.
ஸ்டார்ட்அப் மஹாகும்ப் என்ற நிகழ்ச்சியில் பேசிய பியூஸ் கோயல், ஸ்டார்ட் அப் துறையில் உள்ள சவால்கள் குறித்து பேசத் தொடங்கினார். நாட்டில் உள்ள பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உணவு விநியோக நெட்வொர்க் மற்றும் ஹைப்பர் பாஸ்ட் லாஜிஸ்டிக்ஸ் போன்ற வணிகங்களில் கவனம் செலுத்துகின்றன.

குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் உணவு டெலிவரி நெட்வொர்க் மற்றும் குவிக் டெலிவரி ஸ்டார்ட் அப்-கள் வசதியை வழங்கலாம். ஆனால் நாட்டின் நீண்ட கால முன்னேற்றத்திற்கு அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அதோடு டீப்டெக் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்றவற்றில் இன்னும் அவ்வளவான புதுமைகள் உருவாக்கப்படவில்லை. இவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கிய தொழில்களாக இருந்தாலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை.
இந்த துறைகளில் புதுமை இல்லாமல் இருப்பது நாட்டின் தொழில்நுட்பம் முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக இருக்கிறது. இளைஞர்களுக்கு உணவு டெலிவரி தளங்கள் வேலைவாய்ப்பை வழங்கினாலும்.. அவர்கள் மலிவான சம்பளத்தை தரும் தொழிலாளர்களாகவே கருதப்படுகின்றனர். இது அவர்களின் திறன் மேம்பாட்டிற்கு ஒருபோதும் வழி வகுக்காது. நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது இது பொருளாதாரத்திற்கும் பயனுள்ளதாக இருக்காது.
பிற நாடுகளை விட இந்தியா எதில் பின்தங்கி இருக்கிறது என்பது குறித்து பேசிய போது.. சீன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செமி கண்டக்டர்கள், ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வாகனங்கள், பேட்டரி தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்தி வருவதாகவும், ஆனால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களோ ஐஸ்கிரீம்கள் அல்லது மளிகை கடைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் கோயல் சுட்டிக்காட்டினார். நமது பொருளாதாரத்திற்கு உண்மையிலேயே மதிப்பு வழங்கும் தொழில்களில் கவனம் செலுத்துவது அவசியம். போட்டி போடுவதற்கு வெட்கப்பட கூடாது. மாறாக புதுமை மற்றும் நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்ய பாடுபட்டு உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை அதிகரிக்கும் திறன் கொண்ட டீப் டெக் துறை வளர்ச்சி அடையாமல் அப்படியே இருக்கிறது என்றும், தற்போது 1,000 ஸ்டார்ட் அப்கள் மட்டுமே இந்த துறையில் ஈடுபட்டுள்ளன என்றும், உலகளவில் போட்டி தன்மையுடன் இருக்க டீப் டெக் கண்டுபிடிப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோயல் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications