லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய டேட்டா மையத்தினை அமைப்பதற்காக, தமிழ் நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது குறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் காஞ்சிபுரத்தில், 90 மெகவாட் திறன் கொண்ட டேட்டா செண்டரை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 600 பேர் நேரடியாகவும், 500 பேர் மறைமுகமாகவும், மொத்தம் 1,100 பேர் வேலை வாய்ப்பினை பெறுவர்.
காஞ்சிபுரத்தில் டேட்டா மையம்
மேலும் இந்த டேட்டா மையம் மல்டி கிளவுட் சேவை மையமாகவும், டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன், ஒருங்கிணைப்பு டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றுடன் விரிவான தீர்வுகள் என பல சேவைகளையும் இதன் மூலம் வழங்குவதாக லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி
இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான எஸ் என் சுப்பிரமணியன், தமிழ் நாடு வளர்ச்சி பாதையில் உள்ளது. எனினும் மேலும் வளர்ச்சியினை தூண்டுவதற்கு இந்த டேட்டா மையம் உதவும். ஆக தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் காஞ்சிபுரத்தில் மகிழ்ச்சியடைகிறோம்.
Array
கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம், கடந்த ஆண்டினை காட்டிலும் 67% குறைந்து, 1,819.45 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் 5,520.27 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் 144 கோடி ரூபாய் மதிப்பிலான ஹைடல் பவர் ஆலையை விற்பனை செய்ததும் அடங்கும்.
தற்போதைய பங்கு விலை
எல் & டி-யின் பங்கு விலையானது தற்போது என்.எஸ்.இ-யில் சற்று குறைந்து, 1884.50 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 1902.50 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 1878.95 ரூபாயாகும்.
இதே பி.எஸ்.இயில் இன்றைய உச்ச விலை 1901.95 ரூபாயாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 1878.70 ரூபாயாகும். தற்போது விலை சற்று குறைந்து, 1884.60 ரூபாயாகும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications