இங்கெல்லாம் வீடு கட்டவே கூடாது.. உங்க வீடு எங்க இருக்கு..???

சொந்த வீடு கட்டுவது என்பது பலருடைய கனவு. இதற்காக சிலர் லோன் பெறுவார்கள், சிலர் தங்களுடைய வாழ்நாள் சேமிப்பை பயன்படுத்துவார்கள். அப்படி பார்த்து பார்த்து கட்டும் வீட்டை எந்தெந்த இடங்களில் கட்ட வேண்டும் என்பதையும் ஆராய வேண்டும். ஏனெனில் சில இடங்களில் வீடு கட்டுவது பிற்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தலாம். இந்த பதிவில் எந்தெந்த இடங்களில் எல்லாம் வீடு கட்ட கூடாது என்பது குறித்து பார்ப்போம்.

ரயில் நிலையத்திலிருந்து 30 மீட்டர் தூரத்திற்குள் இடம் வாங்கி வீடு கட்டுவது அல்லது எந்த விதமான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதும் ரயில்வே பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது. டிடிசிபி விதிமுறைகளின் படி இது பரிந்துரைக்கப்படவில்லை. டிடிசிபி அப்ரூவல் பெற வேண்டுமானால் அதற்கு ரயில் நிலையத்திலிருந்து முப்பது மீட்டர் தொலைவில் தான் ஒரு இடம் இருக்க வேண்டும்.

இங்கெல்லாம் வீடு கட்டவே கூடாது.. உங்க வீடு எங்க இருக்கு..???

அதோடு ரயில்களின் அதிர்வு மற்றும் சத்தம் வீட்டின் அமைப்பை பாதிப்பதோடு குடியிருப்பவர்களுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். ரயில் பாதைகளுக்கு அருகில் வசிப்பதால், ரயில்களில் இருந்து வரும் காற்று மாசுபாடு ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

ஏரி, கால்வாய் போன்ற நீர் நிலைகளிலிருந்து 15 மீட்டர் தூரத்திற்குள் எந்த விதமான கட்டிடங்களையும் கட்டக்கூடாது. மழைக்காலங்களில் நீர் வரத்து அதிகரித்தால், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. மயானக் கொட்டகையிலிருந்து 90 மீட்டர் தூரத்திற்குள் எந்த விதமான கட்டிடங்களையும் கட்டக்கூடாது. விமான நிலையங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு அருகிலும் பில்டிங் கட்டுவது ஆபத்தானது. இது போன்ற இடங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு பிறகு தான் பில்டிங் கட்ட வேண்டும்.

மனைகளை பொருத்தவரையில் அவை இரண்டு விதங்களில் உள்ளன. ஒன்று அங்கீகரிக்கப்பட்ட மனை. இதை ஆங்கிலத்தில் "அப்ரூவ்ட் லேண்ட்" என்று சொல்வார்கள். மற்றொன்று அங்கீகரிக்கப்படாத மனை. இது "அன்அப்ரூவ்ட் லேண்ட்". புதிய மனை பிரிவுகள் மற்றும் கட்டிடங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் டிடிசிபி-க்கு உள்ளது. டிடிசிபி என்பது நகர் ஊரமைப்பு இயக்கமாகும்.

இது தமிழ்நாடு அரசின் துறையாகும். நகரங்கள் மற்றும் கிராமங்களின் வளர்ச்சியை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம். அதோடு நில பயன்பாடு, கட்டிடங்கள், சாலை விதிகள் போன்ற அனைத்தையும் ஒழுங்கு படுத்துவதும் இந்த டிடிசிபி தான். ஏதேனும் புதிய மனைகள் விற்பனைக்கு வந்தால் அவற்றை அங்கீகரிக்கும் பொறுப்பு டிடிசிபிக்கு உள்ளது. எனவே அங்கீகரிக்கப்பட்ட மனை அனைத்தும் டிடிசிபி போன்ற அரசு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நிலமாகும். இதில் வீடு கட்டுவது சட்டபூர்வமானது. சாலை வசதி, குடிநீர், மின்சாரம், வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் இருக்கும்.

அப்ரூவ்ட் மனைகளுக்கு வங்கி கடன்களும் எளிதாகக் கிடைக்கும். அதுவே அரசு அங்கீகாரம் இல்லாத அன்அப்ரூவ்டு மனைகளாக இருந்தால்.. அதில் வீடு கட்டுவது சட்டவிரோதமானது. இதில் அடிப்படை வசதிகள் இருக்காது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அரசு இந்த நிலங்களை கையகப்படுத்தலாம். ஒரு வேலை இது போன்ற அன் அப்ரூவ்ட் இடங்களை வாங்கி மக்கள் வீடு கட்டி விட்டால், அந்த இடத்தை அரசு கையகப்படுத்தும் போது பெரும் நிதி இழப்பு ஏற்படலாம்.

Take a Poll

பெரும்பாலும் மக்களே அப்ரூவ்ட் மனைகளை விட குறைவான விலை இருப்பதால் அன்அப்ரூவ்டு மனைகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று தாங்களாகவே வாங்குகின்றனர். இது முற்றிலும் தவறு டிடிசிபி அப்ரூவல் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு குறிப்பிட்ட சில வரம்புகள் இருக்கும். மேலே கூறப்பட்டது போல் ரயில் நிலையங்களில் 30 மீட்டருக்கு தொலைவில் இருக்க வேண்டும். மேலும் பிற வரம்புகளையும் அவை பூர்த்தி செய்தால் தான் அப்ரூவல் கிடைக்கும்.

நிலம் வாங்கும் போது, குறைந்த விலைக்காக அங்கீகரிக்கப்படாத மனைகளைத் தேர்ந்தெடுப்பது எதிர்காலத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். அங்கீகரிக்கப்படாத மனைகளில் வீடு கட்டுவது சட்டவிரோதமானது என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+