சென்னை: இந்தியாவில் தற்போது கார் வாங்குவது மிகவும் எளிதாகிவிட்டது. பல்வேறு நிதி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வாகன கடன்களை வழங்குவது இதற்கு ஒரு காரணமாக கூறலாம். நீங்கள் கார் வாங்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறீர்கள், அதற்காக வாகன கடன் வாங்க போகிறீர்கள் என்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான்.
கடன் தொகை:
காருக்காக வாகன கடன் வாங்குகிறீர்கள் என்றால் எவ்வளவு தொகையை கடனாக வாங்கி இருக்கிறீர்கள் என்பதை முதலில் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். இதனை அசல் கடன் தொகை என அழைக்கிறார்கள. நீங்கள் வாங்கக்கூடிய காரின் விலை ,அதற்காக நீங்கள் செலுத்தப் போகும் டவுன் பேமெண்ட் , கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் உங்களுக்கான கடன் தொகை முடிவு செய்யப்படும்.

வட்டி விகிதம்:
நீங்கள் வாங்கக்கூடிய காரின் வகை , உங்களுடைய கிரெடிட் ஸ்கோர், உங்களுடைய வருமானம் நீங்கள் கடன் வாங்கும் நிறுவனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் உங்களுக்கான வட்டி தீர்மானம் செய்யப்படுகிறது. நீங்கள் வாகன கடன் வாங்குவதற்கு முன்பு எவ்வளவு வட்டி செலுத்த வேண்டி இருக்கிறது என்பதை ஒப்பீடு செய்து பார்ப்பது நல்லது.
உதாரணமாக 5 லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறீர்கள் என்றால் 9 சதவீத வட்டி எனில் நீங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த 5 லட்சம் ரூபாய்க்கு 6.22 லட்சம் ரூபாயாக திரும்ப செலுத்த வேண்டும். இதுவே 12 சதவீதம் வட்டி என்றால் 5 ஆண்டுகளில் 6.66 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும்.
கடன் திரும்ப செலுத்தும் காலம்:
பொதுவாக வாகன கடன்கள் 1 முதல் 7 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு வழங்கப்படுகின்றன. குறைந்த காலம் என்றால் நீங்கள் மாதந்தோறும் செலுத்தக்கூடிய இஎம்ஐ தொகை அதிகமாக இருக்கும். ஆனால் நீங்கள் செலுத்தும் வட்டி அளவு குறைந்துவிடும், நீண்ட காலம் என்றால் மாதந்தோறும் குறைந்த தொகை இஎம்ஐ செலுத்துவீர்கள் ஆனால் அதிக வட்டியை செலுத்தி இருப்பீர்கள்.
உதாரணமாக 5 லட்சம் ரூபாய் வாகன கடனுக்கு 10 சதவீத வட்டி விகிதத்தில் 3 ஆண்டுகள் கடன் காலம் என்றால் நீங்கள் மாதத்திற்கு 16,134 ரூபாய் செலுத்துவீர்கள், மொத்தம் செலுத்தக்கூடிய வட்டி இதில் 80, 824 ரூபாய்.
5 ஆண்டு கடன் செலுத்தும் காலம் என்றால் மாதந்தோறும் நீங்கள் செலுத்தும் இஎம்ஐ 10, 624 ரூபாய், ஆனால் நீங்கள் செலுத்தும் மொத்த வட்டி 1.37 லட்சம் ரூபாய்.
டவுன் பேமெண்ட்:
காரை வாங்க உங்கள் கையில் இருந்து எவ்வளவு பணத்தை கொடுக்கிறீர்கள் என்பது தான் இந்த டவுன் பேமெண்ட். பெரும்பாலான வங்கிகளும் நிதி நிறுவனங்களும் 90% வரையிலான பணத்தை கடனாக கொடுக்கின்றன. மீதி தொகையை நீங்கள் டவுன் பேமெண்டாக செலுத்தியாக வேண்டும். நீங்கள் எவ்வளவு அதிகமாக டவுன் பேமெண்ட் செலுத்துகிறீர்களோ உங்களுடைய கடன் மற்றும் வட்டி குறையும்.
செயலாக்க கட்டணம்:
வாகன கடன் வாங்கும் போது கடன் வழங்கும் நிறுவனம் உங்களுடைய அசல் தொகையில் 0.5 சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரை செயலாக்க கட்டணமாக பெறும். அது தவிர நீங்கள் முன்கூட்டியே கடனை திரும்ப செலுத்துகிறீர்கள் என்றால் அதற்கு pre-payment penalty வசூல் செய்யும். தாமதமாக நீங்கள் கடனை செலுத்துகிறீர்கள் என்றால் late payment penalty என அபராதம் விதிக்கப்படும். இது போன்ற மறைமுக கட்டணங்களை கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.
கார் கடனை குறைப்பது எப்படி?
உங்கள் கார் கடனை குறைக்க வேண்டும் என்றால் அதிக டவுன் பேமெண்ட் செலுத்துவது நல்லது, பல்வேறு வங்கிகள் வழங்கக்கூடிய வட்டி விகிதத்தை ஒப்பீடு செய்து அதன் அடிப்படையில் எங்கு கடன் வாங்கலாம் என்பதை தேர்வு செய்யலாம், குறைந்த கடன் செலுத்தும் காலத்தை தேர்வு செய்தால் நீங்கள் செலுத்தும் வட்டி குறையும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications