ஆஸ்திரேலியா: இந்திய மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்வது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்திய மாணவர்கள் செல்ல தேர்வு செய்யும் நாடுகளில் ஆஸ்திரேலியா பிரதான இடத்தை பிடித்திருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசு வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டிற்கு வந்து படிப்பதற்கான விசா நடைமுறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை புதிதாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா வர விரும்பும் மாணவர்கள் புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பொதுவாக எந்த ஒரு நாட்டிலும் மாணவர் விசாவில் செல்லும் நபர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களது வங்கி கணக்கில் சேமிப்பாக வைத்திருக்க வேண்டும்.

இதற்கான ஆதாரத்தை காட்டினால் மட்டுமே குறிப்பிட்ட அந்த நாட்டின் அரசானது மாணவர்களுக்கு விசாவினை வழங்கும். தற்போது ஆஸ்திரேலியா அரசு மாணவர்கள் சேமிப்பாக வைத்திருக்க வேண்டிய தொகையின் அளவினை அதிகரித்திருக்கிறது.
புதிய விதிமுறைகளின் படி ஆஸ்திரேலியாவின் குறைந்தபட்ச ஊதியத்தில் சுமார் 75 சதவிகித தொகையை மாணவர்கள் அவர்கள் வங்கி கணக்கில் வைத்திருக்க வேண்டும்.
அதாவது ஆஸ்திரேலியாவில் உள்ள குறைந்தபட்ச ஊதியத்தில் 75% என்ற போது இதன் மதிப்பு 29,710 டாலர்கள் இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 16.29 லட்சம் ரூபாய். எனவே இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் எனில் அவர்களது வங்கி கணக்கில் கிட்டத்தட்ட 16 .29 லட்சம் ரூபாய் சேமிப்பாக வைத்திருக்க வேண்டும்.
இதற்கான ஆதாரத்தை காட்டினால் மட்டுமே மாணவர்களுக்கு விசா கிடைக்கும். இந்த விதிமுறை மே 10ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துவிட்டது என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது . ஆஸ்திரேலியாவில் படிப்பதற்காக விசாவிற்கு விண்ணப்பம் செய்யும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த போட்டி அதிகரித்ததன் காரணமாகவே ஆஸ்திரேலியா அரசு வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் முறையில் அடிக்கடி கட்டுப்பாடுகளை அறிவித்த வண்ணம் இருக்கிறது.
கடந்த ஏழு மாதங்களில் மட்டும் ஆஸ்திரேலியா அரசு இந்த சேமிப்புத் தொகையை இரண்டாவது முறையாக உயர்த்தி இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் இது வெறும் 11.54 லட்சம் ரூபாயாக தான் இருந்தது. தற்போது இது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு மாணவர் விசாவில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அந்த நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் சிலர் படிக்கும் காலத்தை தாண்டி சட்டவிரோதமாக அங்கேயே தங்கிவிடுகின்றனர். எனவே தான் ஆஸ்திரேலிய அரசு அவ்வப்போது கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவர்கள் பார்ட் டைம் ஆக வேலை செய்யலாம் என்றாலும் 15 நாட்களுக்கு 48 மணி நேரம் என்ற கணக்கிற்கு மிகாமல் வேலை செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
Story written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications