துபாய்: இந்தியாவை சேர்ந்த உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் பலரும் துபாய் ரியல் எஸ்டேட் பிரிவில் முதலீடு செய்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு துபாயில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அதற்கு முன்னர் குறிப்பிட்ட சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

துபாயில் முதலீடு செய்வதன் நன்மைகள்:
இந்தியாவின் அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் மற்றும் உயர் சொத்து மதிப்பு கொண்டு தனிநபர்களின் விருப்பமான முதலீட்டு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் மாறி இருக்கிறது. உதாரணமாக மும்பையில் 100 சதுர மீட்டர் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் விலை 5.7 கோடி ரூபாய் என்றால் ,துபாயில் அது 5.8 கோடி ரூபாய்.
துபாய் அதிகளவு வாடகை வருமானம் வரக்கூடிய ஒரு நகரமாக இருக்கிறது. இதுவே பெரும்பாலான இந்தியர்கள் துபாயில் முதலீடு செய்வதற்கு காரணம் என அங்கே இயங்கி வரக்கூடிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன.
துபாயில் வாடகை வருமான விகிதம் சராசரியாக 7 சதவீதம் என தெரிய வருகிறது. துபாய் ரியல் எஸ்டேட் சந்தை ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சந்தையாக இருப்பதால் நம்பி முதலீடு செய்யலாம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வருமானவரி, சொத்து வரி , மூலதன ஆதாய வரி ஆகியவை கிடையாது என்பதால் பெரும்பாலான இந்தியர்கள் அங்கே வீடு வாங்குகின்றனர்.
என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்?
இவ்வாறு வெளிநாட்டில் சொத்து வாங்கும்போது அதற்கான முழு தொகையையும் நீங்கள் கைகளில் இருந்து கொடுக்க வேண்டும்.ஏனெனில் வெளிநாட்டு பண பரிவர்த்தனை சட்டம் கடன் வாங்கி வெளிநாட்டில் சொத்துக்களை வாங்குவதற்கு அனுமதி வழங்குவது கிடையாது.
துபாயில் வீடு வாங்க வேண்டும் என விரும்பினால் அரசின் ஒழுங்குமுறை விதிமுறைகளை முதலில் படித்து புரிந்து கொள்ள வேண்டும், ஒருவேளை அதை மீறி செயல்பட்டால் பெரிய அளவு அபராதமும் தண்டனையும் கிடைக்க நேரிடும்.
அதே போல இந்தியாவை சேர்ந்த ஒரு நபர் ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 2.1 கோடி ரூபாயை மட்டுமே வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முடியும். வேண்டுமெனில் மற்றொரு குடும்ப நபரின் வங்கி கணக்கில் இருந்தோ அல்லது ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றோ தான் அனுப்ப முடியும்.
துபாயில் வீடு வாங்குவதற்கு 3 - 4 கோடி ரூபாய் வரை தேவை என்பதால் இந்த வரம்பை மீறி பணம் அனுப்பும்போது அது சட்ட சிக்கலை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது.
கட்டுமான பணியில் இருக்கக்கூடிய குடியிருப்புகள் அல்லது இனிமேல் தான் கட்டப் போகிறார்கள் எனும் போது தவணை முறையில் பணம் செலுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் இந்தியாவிலிருந்து சட்டப்படி பணம் அனுப்பப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
துபாயில் வருமான வரி, சொத்து வரி செலுத்த வேண்டியதில்லை, ஆனால் இந்தியாவிலிருந்து கொண்டு அங்கே நீங்கள் வீடு வாங்கி அதில் வாடகை வருமானம் பார்க்கிறீர்கள் எனும் போது வருமான வரி சட்டத்தின் கீழ் நீங்கள் அந்த வருமானத்தை குறிப்பிட்டாக வேண்டும்.
துபாயில் முதலீடு செய்வது சிறந்த முதலீட்டு வாய்ப்பாக இருந்தாலும் எந்த இடத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.
Freehold பகுதிகளில் நீங்கள் வாங்கக்கூடிய சொத்துக்கு உங்களுக்கு முழுவதும் உரிமை கிடைக்கிறது, ஆனால் Leasehold பகுதியில் வாங்கக்கூடிய சொத்துகளுக்கு 99 ஆண்டுகள் வரை மட்டுமே உரிமம் இருக்கும். எனவே நீங்கள் வாங்கக்கூடிய இடம் குறித்து விரிவாக ஆய்வு செய்து கொள்வது நல்லது.
துபாயில் சொத்து வாங்கும் போது, குறிப்பிட்ட சில கூடுதல் கட்டணங்களையும் செலுத்த வேண்டியிருக்கும் உதாரணமாக சொத்தின் மதிப்பில் 4 சதவீதம் தொகையை துபாய் நிலத்துறைக்கு செலுத்தியாக வேண்டும், அதேபோல் பதிவு கட்டணமாக 95 ஆயிரம் ரூபாய், 5 சதவீத வாட் வரி ஆகியவை செலுத்த வேண்டும். மேலும் பத்திரங்களுக்கான கட்டணம், முகவர்களுக்கான கட்டணம் என கணிசமான தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications