ஜோஹோ கார்ப்பரேஷன் (Zoho) என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு பன்னாட்டு சாஃப்ட்வேர் மேம்பாட்டு நிறுவனமாகும். இதன் தலைமையகம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமானவர் (CEO) புகழ்பெற்ற தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு. உலகெங்கிலும் உள்ள சிறு, நடுத்தர மற்றும் பெரிய வணிக நிறுவனங்களுக்காக கிளவுட் அடிப்படையிலான மென்பொருள் தொகுப்புகளை உருவாக்குவதில் ஜோஹோ நிபுணத்துவம் பெற்றுள்ளது.
மேலும் வாடிக்கையாளர் உறவு மேலாண்மை, நிதி மற்றும் HR மேலாண்மை, கூட்டுப்பணி கருவிகள் மற்றும் பல்வேறு தனிப்பயன் வணிகச் செயலிகள் என 50-க்கும் மேற்பட்ட செயலிகளின் தொகுப்பை ஜோஹோ வழங்குகிறது

தற்போது, ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, 'அரட்டை' (Arattai) என்ற முற்றிலும் தமிழ் பெயரைக் கொண்ட புதிய மெசேஜிங் செயலியை அறிமுகப்படுத்தி தொழில்நுட்ப உலகில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் வாட்ஸ்அப் செயலிக்கு வலுவான மாற்றாக பயன்படுத்தும் வகையில் இந்த 'அரட்டை' செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. பெயருக்கு ஏற்றபடியே, இந்த செயலி பயனர்கள் ஒருவருக்கொருவர் மெசேஜ் அனுப்புவது, வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் பேசுவது போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்குகிறது.
மேலும், வாட்ஸ்அப்பில் இருப்பதைப் போலவே புகைப்படங்கள், வீடியோக்கள், டாக்குமெண்டுகள் ஆகியவற்றை எளிதாகப் பகிரும் வசதியும் இதில் உள்ளது. குறிப்பாக, இந்த செயலியின் லோகோ தமிழ் மொழியின் முதல் எழுத்தாகிய 'அ' வடிவத்தில் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
தனது புதிய தகவல் தொடர்பு செயலியான அரட்டையினால் (Arattai) தற்போது செய்தித் தலைப்புகளில் இடம்பிடித்துள்ள ஜோஹோ (Zoho) நிறுவனம், புதிய ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஐடி துறையில் சிறந்து விளங்கும் ஜோஹோ, புதிய பட்டதாரிகளுக்கு (Freshers) பல்வேறு தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் கவர்ச்சிகரமான ஊதியத்தை வழங்கி வருகிறது.
மூன்றாம் தரப்பு மதிப்பீட்டு தளங்களின் (Glassdoor மற்றும் AmbitionBox போன்றவை) தரவுகளின் அடிப்படையில், ஜோஹோ நிறுவனத்தில் சில முக்கியப் பணிகளுக்கான வருடாந்திர ஊதிய விவரங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
ஊதிய விவரங்கள் :
ஜோஹோவில் புதிதாகச் சேரும் ஒரு மென்பொருள் உருவாக்குநர் (Software Developer) ஆண்டுக்கு சுமார் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பாதிக்க வாய்ப்புள்ளது.
ஒரு மென்பொருள் பொறியாளர் (Software Engineer) ஆண்டுக்கு சுமார் ரூ.5 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை ஊதியம் பெற முடியும்.
தொழில்நுட்ப வாடிக்கையாளர் ஆதரவுப் பணிகளில் (Technical Support) ஆர்வமுள்ள ஒரு தொழில்நுட்ப ஆதரவுப் பொறியாளர் (Technical Support Engineer), ஆண்டுக்கு தோராயமாக ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை ஊதியம் பெறலாம்.
நிறுவனத்தின் விற்பனை மற்றும் விரிவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு சந்தைப்படுத்தல் ஆய்வாளர் (Marketing Analyst), ஆண்டுக்கு சுமார் ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
அனுபவம் இல்லாதவர்களுக்கான ஆரம்ப நிலையான இன்டர்ன் (Intern) பணிக்கு, ஆண்டுக்கு சுமார் ரூ.7 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த கிராஃபிக் வடிவமைப்பாளரின் (Senior Graphic Designer) ஆண்டு ஊதியம் ரூ.12 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications