பெங்களூர்: கர்நாடக அரசு புதிதாக தொழில் தொடங்குவதற்காக தங்களுடைய வேலையை விட்டுவிட்டு வருபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கர்நாடக ஐடி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே "புதிய தொழில் தொடங்குவது என்பது ஒருவர் எடுக்கக்கூடிய ஆபத்துகள் நிறைந்த ஒரு முயற்சி. ஒருவர் நிலையான தனது வேலையை விட்டுவிட்டு புதிய முயற்சியில் ஈடுபடும்போது அவருக்கு அது நிதி ரீதியாக மிகவும் ஆபத்தாக இருக்கும். பல திறமையான நபர்கள் நிதியில்லாத காரணத்தினால் தான் தொழில் தொடங்க தயங்குகின்றனர். எனவே தான் தங்கள் வேலையை விட்டுவிட்டு புதிதாக தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தை நாங்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

இந்த உதவி தொகை அவர்களின் நிதி சுமையை ஓரளவு குறைக்க உதவும் என அவர் கூறியுள்ளார். அதன்படி ஒரு வருடத்திற்கு மாதம் தோறும் 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் புதிதாக தொழில்முனைவோர்கள் தங்களது அன்றாட செலவுகளை பற்றி கவலைப்படாமல் தங்கள் வணிகங்களில் மட்டுமே கவனம் செலுத்த முடியும் என்றும் உரிய தகுதியின் அடிப்படையில் நபர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த மாத உதவி தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
தங்களின் அரசு ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என சுட்டிக்காட்டிய அவர் கர்நாடக அரசோடு ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் பதிவு செய்கிறது என்றால் அவர்களின் முதல் வாடிக்கையாளர் கர்நாடக அரசாகத்தான் இருக்கும் எனக் கூறியுள்ளார்.
முன்னதாக 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது, கர்நாடக முதலமைச்சர் ராஜீவ்காந்தி தொழில் முனைவோர் திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இதன்படி அறிவியல் அல்லது பொறியியல் பின்னணி கொண்ட இளம் தொழில் முனைவோருக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார்.
இதனிடையே வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் இதன் மூலம் பெங்களூரில் ஸ்டார்ட் அப்களை தொடங்குவதற்கு பதிவு செய்திருப்பதாக கார்கே கூறியுள்ளார். குறிப்பாக துறை சார்ந்த காரிடார்கள் பெங்களூரில் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார். முதலில் ஏஐ காரிடார் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications