அடிக்கடி கேம் விளையாடுபவரா நீங்கள்? இலவச கேமில் ஒளிந்திருக்கும் பூதம்..! மக்களே உஷார்..!

இன்றெல்லம் எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தங்களுக்கு போர் அடிக்கும் நேரங்களில் கேம் விளையாடுகின்றனர். ஒரு சில கேமை டவுன்லோட் செய்து விளையாடாத் தொடங்குவதற்கே பணம் செலுத்த வேண்டும். ஆனால் சில கேம்கள் இருக்கின்றன. அதை நீங்கள் இலவசமாக விளையாடத் தொடங்கலாம்.

ஆனால் விளையாடத் தொடங்கிய பிறகு ஒரு சில லெவலை தாண்டுவதற்கே பணம் செலுத்தும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷனும் அடங்கும். அதிக ஆர்வத்துடன் விளையாடும் சிலர் கேமுக்காக செலவழிக்கும் தொகையை கருத்தில் கொள்ளாமல் உடனடியாக செலுத்தி விடுவார்கள். ஆனால் இதுவே பிற்காலத்தில் பெரிய செலவாக மாறிவிடும்.

அடிக்கடி கேம் விளையாடுபவரா நீங்கள்? இலவச கேமில் ஒளிந்திருக்கும் பூதம்..! மக்களே உஷார்..!

இலவச கேமுக்கும் பணம் செலுத்த வேண்டுமா?: சில கேம்களை விளையாடத் தொடங்கும் போது எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ஆனால் ஒவ்வொரு லெவலையும் தாண்ட தாண்ட அதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்.

உதாரணமாக ஒரு சில லெவல் கடினமாக இருக்கும். அதைத் தாண்டுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படும். சில கேம்களில் டைமிங் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த டைமிங்கை கடந்த பிறகு தான் மீண்டும் விளையாட முடியும்.

Also Read

அதோடு ஸ்டோன், ஜெம்ஸ், ஆயுதங்கள் மற்றும் கேமில் வரும் கேரக்டருக்கு ஆடை வாங்குவதற்கு என எல்லாவற்றுக்கும் கட்டணம் விதிக்கப்பட்டிருக்கும். விளையாடும் ஆர்வத்தில் சிலர் இந்த தொகையை பெரிதாக நினைக்காமல் உடனடியாக பணம் செலுத்தி விடுவார்கள். இதனால் மாதாந்திர பட்ஜெட்டில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் நினைப்பார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த சிறிய தொகையே பெரிய தொகையாக மாறிவிடும்.

ஒவ்வொரு முறையும் தனித்தனியாக பணம் செலுத்துவது எளிதாகத் தோன்றினாலும் மொத்தமாக எவ்வளவு செலவாகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

இலவச கேமில் ஒளிந்திருக்கும் மறைமுக கட்டணம்: கேம் வடிவமைப்பாளர்கள் அதை டவுன்லோட் செய்யும் பயனர்கள் பணம் செலுத்தத் தூண்டும் வகையில் தான் அவற்றை டிசைன் செய்கிறார்கள். திடீரென டைமர் நின்றுவிடும் அல்லது டைமர் நீண்ட நேரத்திற்கு அமைக்கப்பட்டு இருக்கும். இதனால் தொடர்ந்து விளையாட முடியாமல் போய்விடும். உடனே அதை தாண்டுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருக்கும்.

சிறிய கட்டணம் தான் என்பதற்காக கேம் விளையாடுபவர்களும் யோசிக்காமல் பணம் செலுத்தி விடுவார்கள். இதைத் தாண்டி சில கேம்களுக்கு மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் இருக்கும். விஐபி பாஸ், பேட்டிங் பாஸ் என தொடர்ந்து உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் சென்று கொண்டே இருக்கும். அதுவும் ஏடிஎம் கார்டு, யுபிஐ, ஆட்டோ பே போன்ற கட்டண முறைகளை கேம் விளையாடுபவர்கள் இணைத்து விட்டால் அவர்களுக்கே தெரியாமல் பணம் சென்று கொண்டிருக்கும்.

எவ்வளவு செலவாகும்?: ஒருவர் வாரத்திற்கு 400 ரூபாய் செலவு செய்கிறார் என்றால் 4 வாரங்கள் கழித்து ரூ.1600 செலவு செய்திருப்பார். இதில் மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் பல கேம்களுக்கு ரூ.499 முதல் தொடங்குகிறது. இரண்டு மாத சப்ஸ்கிரிப்ஷனே 1000 ரூபாய் ஆகிவிடுகிறது.

இதில் கூடுதல் கேரக்டர் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலவழிக்கின்றனர். அப்படிப் பார்த்தால் மொத்த செலவு மட்டுமே ரூ.3000 முதல் ரூ.5000 வரை வந்து விடுகிறது. அதுவே ஆண்டுக்கு ரூ.60,000 வரை சென்று விடும்.

பலரும் கேமிங் செலவோடு வீடியோ ஸ்ட்ரீமிங், ஃபிட்னஸ் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற கட்டணங்களுக்கும் சேர்த்து பணம் செலுத்துகின்றனர். இதனால் கேம் விளையாட மட்டும் எவ்வளவு செலவாகிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

செலவை கட்டுப்படுத்துவது எப்படி?: ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோருக்கு சென்று நீங்கள் விளையாடாத கேமுக்கு பாஸ் அல்லது சப்ஸ்கிரிப்ஷன் இருந்தால் உடனடியாக கேன்சல் செய்ய வேண்டும். ஆட்டோ பே மூலம் பணம் டெபிட் ஆவதை தடுப்பதற்கு உங்களுடைய போனில் சேமிக்கப்பட்டிருக்கும் கிரெடிட், டெபிட் கார்டு விவரங்களை நீக்கிவிடலாம்.

அதையும் மீறி கேம் விளையாட நினைப்பவர்கள் தனியாக கட்டணம் ஒதுக்கி பயன்படுத்தலாம். அந்த தொகை தீர்ந்து போனால் மறு மாதம் வரை கேம் விளையாடாமல் இருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+