சர்வதேச அளவில் மின்சார வாகன துறையில் மிகப்பெரிய ஜாம்பவான் ஆக இருந்து வரும் எலான் மஸ்க், தொடர்ந்து பல்வேறு வணிகங்களை செய்து வருகின்றார். தற்போது பர்ன்ட் ஹேர் என்ற பெயரில் வாசனை திரவிய தொழிலில் கால்பதித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்திலும் தனது புரபைலில் வாசனை திரவிய விற்பனையாளர் என மாற்றியுள்ளார்.
இது ட்விட்டர் பயனர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய பில்லியனரான எலான் மஸ்க்-ன் இந்த செய்கையால் பலரும் பல்வேறு விதமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
எலான் மஸ்கின் குறும்புத்தனமான ட்வீட்
மேலும் தனது ட்விட்டர் பதிவில் தயவுசெய்து என்னுடைய வாசனை திரவியத்தினை வாங்குங்கள். அப்போது தான் என்னால் ட்விட்டரை வாங்க முடியும் என குறும்புத்தனமாக பதிவிட்டுள்ளார். எலான் மஸ்கின் இந்த பதிவினை பல லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். பல லட்சம் பேர் பதிலளித்துள்ளனர்.
விலை எவ்வளவு தெரியுமா?
எலான் மஸ்கின் இந்த பர்ன்ட் ஹேர் வாசனை திரவியத்தினை Shop.boringcompany.com என்ற இணைய பக்கத்தில் வாங்கலாம். இதன் விலை சுமார் 100 டாலர்களாகும். இந்திய மதிப்பில் சுமார் 8400 ரூபாயாகும். கடந்த அக்டோபர் 12ம் தேதியன்று பதிவிட்ட ட்வீட்டில் இதுவரையில் 10,000 பாட்டில்கள் வாசனை திரவியத்தினை விற்பனை செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
பல பொருட்கள் விற்பனை
எலான் மஸ்கின் இந்த பதிவுக்கு பிறகு பல ஆயிரம் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக 2018ல் போரிங் நிறுவனத்திற்காக தொப்பிகளை விற்பனை செய்ததும், நெருப்பினை உமிழும் துப்பாக்கியினை விற்பனை செய்தத்து குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் கையக்கப்படுத்தல்
இதற்கிடையில் ட்விட்டரை கையகப்படுத்த பல மாதங்களாகவே பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. இந்த கையகப்படுத்தலும் விரைவில் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் பூமியில் சிறந்த வாசனை திரவியம் என்று கூறும் பர்ன்ட் ஹேர் திரவியமும் விற்பனை களைகட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications