இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ள வேளையில் இத்துறை சார்ந்த வர்த்தகத்தையும், உற்பத்தியையும் மேம்படுத்த வேண்டும் என்பது அரசின் மிக முக்கியப் பணியாக உள்ளது. இந்தச் சூழ்நிலை மத்திய அரசு ஒரு முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ள நிலையில் 20 நிறுவனங்கள் போட்டிப்போட்டு உள்ளது.
இதில் குறிப்பாக டாடா கெமிக்கல்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓலா எலக்ட்ரிக் எனப் பல முக்கியமான நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகிறது.
கிளாஸ்கோவ் பருவநிலை மாநாடு
சமீபத்தில் கிளாஸ்கோவ்-ல் நடந்த பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் இந்தியா 2030க்குள் 1 பில்லியன் டன் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும், 2070க்குள் நெட் ஜீரோ நிலையை அடையவும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
எலக்ட்ரிக் கார்
இதேவேளையில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் விற்பனையை அதிகரிக்க நித்தி அயோக் Priority Sector Lending பிரிவின் கீழ் எலக்டரிக் வாகனங்கள் வாங்குவதற்கான கடனை அளிக்கத் திட்டத்தை முன்வைத்தது. இத்திட்டம் ரிசர்வ் வங்கி ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், எலக்டரிக் வாகனங்களுக்கான கடன் மிகவும் குறைந்த வட்டியில் மக்களுக்கு அளிக்க முடியும்.
PLI திட்டம்
இப்படிப் பல வகையில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் பணிகளை நடந்து வரும் நிலையில் மத்திய அரசு இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் பேட்டரியை தயாரிப்பதற்காக PLI திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அட்வான்ஸ் கெமிஸ்ட்ரி செல் பேட்டரி
இந்தியாவில் அட்வான்ஸ் கெமிஸ்ட்ரி செல் பேட்டரீஸ் தயாரிப்பைக் குறைந்த காலகட்டத்தில் மேம்படுத்த PLI திட்டம் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தில் பங்குபெற சுமார் 20 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளது.
அருண் கோயல்
மத்திய அரசு இந்தியாவில் சுமார் 50GWh அளவிலான பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்து PLI திட்டத்தை அறிவித்தது. ஆனால் எதிர்பார்க்காத வகையில் இரண்டு மடங்கு அதிக அளவிலான உற்பத்தி தளத்திற்கு விண்ணப்பம் குவிந்துள்ளது என மத்திய அமைச்சரான அருண் கோயல் தெரிவித்துள்ளார்.
முக்கிய நிறுவனங்கள்
ஏற்கனவே பேட்டரி தயாரிப்பில் இருக்கும் அமர ராஜா, எக்சைட் லெக்லான்சே எனர்ஜி, லூகாஸ் டிவிஎஸ், டாடா கெமிக்கல்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓலா எலக்ட்ரிக் எனப் பல முன்னணி நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளது.
18,100 கோடி ரூபாய்
இத்திட்டத்திற்கான அறிவிப்பை மத்திய அரசு அக்டோபர் மாதம் வெளியிட்டது. தற்போது 18,100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்குப் பிஎல்ஐ திட்டத்திற்குச் சுமார் 20 நிறுவனங்கள் முதல் கட்டமாகத் தேர்வு செய்துள்ளது மத்திய அரசு.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications