ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. 400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த Pluralsight..!

உலகளவில் டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வந்த நிலையில், தொடர்ந்து குறையாமல் உள்ளது மாத சம்பளக்காரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றால் மிகையில்லை.

இந்நிலையில் ஐடி ஊழியர்கள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் Pluralsight நிறுவனம் திடீரெனப் பெரும் பகுதி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு

2022 ஆம் ஆண்டு

வருடத்தின் இறுதியில் பணிநீக்க அறிவிப்புகள் அதிகமாக இருக்காது எனப் பலரும் கணித்த நிலையில், அனைத்து தரப்பினரும் 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் தான் பணிநீக்க அறிவிப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

பணிநீக்கம்

பணிநீக்கம்

ஆனால் செலவுகளைக் குறைத்து முதலீட்டாளர்களுக்கு லாப கணக்குக் காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள நிறுவனங்களுக்குப் பணிநீக்கத்தைத் தவிர்க்க முடியில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Pluralsight நிறுவனம்

Pluralsight நிறுவனம்

சாப்ட்வேர் டெவலப்பர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கான ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமாக இருக்கும், Pluralsight சமீபத்தில் தான் புதிய முதலீட்டை திரட்டும் போது சுமார் 1 பில்லியன் டாலர் அளவில் மதிப்பிடப்பட்டு உள்ளது.

20 சதவீத ஊழியர்கள்

20 சதவீத ஊழியர்கள்

இந்த நிலையில் வருடத்தின் இறுதியில் Pluralsight தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருக்கும் ஊழியர்களில் சுமார் 20 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்து சுமார் 400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை Pluralsight ஊழியர்களுக்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Pluralsight சிஇஓ

Pluralsight சிஇஓ

Pluralsight நிறுவனத்தின் சிஇஓ-வான ஆரோன் ஸ்கோனார்ட் ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில் இந்தப் பணிநீக்க முடிவிற்கும், இந்த இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டத்திற்கு முழுப் பொறுப்புகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

விளக்கம்

விளக்கம்

Pluralsight நிறுவனத்தின் சிஇஓ-வான ஆரோன் ஸ்கோனார்ட் ஏற்கனவே தனது ஊழியர்களிடம் பொருளாதாரம் எவ்வளவு மோசமாக உள்ளது, நாம் எப்படி இயங்கி வருகிறோம், நம்முடைய வர்த்தகம் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது போன்ற அனைத்தையும் விவாதித்துள்ளார்.

4வது காலாண்டு

4வது காலாண்டு

ஆனால் இந்த மோசமான வர்த்தகப் பாதிப்பு 2022 ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது, இதனால் ஊழியர்களை எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என 20 சதவீத ஊழியர்கள் பணிநீக்கத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

தொடர் நஷ்டம்

தொடர் நஷ்டம்

Pluralsight நிறுவனம் 2004 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டது, அமெரிக்கப் பங்குச்சந்தையில் கிடைத்தரவுகள் படி இந்நிறுவனம் 2019ல் 163.5 மில்லியன் டாலரும், 2020ல் 164 மில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டது.

964 நிறுவனங்கள்

964 நிறுவனங்கள்

layoffs.fyi நிறுவனம் உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட பணிநீக்க அறிவிப்புகளின் தரவுகளைத் திரட்டி வரும் நிலையில் Pluralsight நிறுவனத்தையும் சேர்த்து இதுவரையில் சுமார் 964 நிறுவனங்கள் சுமார் 1,49,876 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

பெங்களூர்

பெங்களூர்

இதில் பெங்களூர் நிறுவனங்கள் மட்டும் சுமார் 60 நிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ளது. பெங்களூர் நிறுவனங்கள் பட்டியலில் அதிகப்படியாகப் பைஜூஸ் 2500 ஊழியர்களையும், ஓலா 2400 ஊழியர்களையும், ஸ்விக்கி 1900 ஊழியர்களையும், Unacademy 1000 ஊழியர்களையும், ஓலா 1000 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+