பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி (CCEA) இன்று நடத்திய முக்கியமான கூட்டத்தில், PM-eBus Sewa என்னும் முக்கியமான திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 10,000 இ-பஸ்கள் அதாவது எலக்ட்ரிக் பஸ்கள் நாட்டின் போக்குவரத்தில் சேர்க்கப்படும், இதோடு அடுத்த 10 ஆண்டுகளுக்கு இதன் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

மத்திய அரசு இந்த PM-eBus Sewa திட்டத்தின் கீழ் நாட்டின் 169 நகரங்களில் 10,000 இ-பஸ்கள் அதாவது எலக்ட்ரிக் பஸ்கள் பயன்படுத்தப்படும். இதை தொடர்ந்து பசுமை நகர்ப்புற இயக்கம் முயற்சிகளின் (Green Urban Mobility Initiatives) கீழ் எலக்ட்ரிக் பஸ்களின் இயக்கத்தை ஏதுவாக்க 181 நகரங்களில் எலக்ட்ரிக் பஸ்களுக்கான உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.
இப்புதிய திட்டத்தை தனியார் - பொது கூட்டாண்மை அதாவது PPP மாடலில் இயக்கப்படும், இந்த PPP மாடலில் இந்திய பெரு நகரப் பேருந்துகளின் இயக்கத்தில் 10,000 இ-பஸ்கள் இணைக்கப்பட்டு எலக்ட்ரிக் பஸ் பயன்பாட்டை அதிகரிக்க உள்ளது. இதுதான் PM-eBus Sewa திட்டத்தின் அடிப்படை.
மத்திய அரசு PM-eBus Sewa திட்டம் சுமார் 57,613 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த உள்ளது. இதில் மத்திய அரசு சுமார் 20,000 கோடி ரூபாய் அளவுக்கான நிதி உதவிகளை வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள தொகையை மாநில அரசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டம் மற்றும் நிதியுதவிகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

மாநகரப் பேருந்து இயக்கங்களில் சுமார் 10,000 எலக்ட்ரிக் பேருந்துகளை ஈடுபடுத்துவதன் மூலம் இந்தத் திட்டம் 45,000 முதல் 55,000 நேரடி வேலைவாய்ப்புகளை 181 நகரங்களில் உருவாக்கப்பட உள்ளது. இதைவிட முக்கியமாக நகர போக்குவரத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் பயன்பாடு சேமிக்கப்படும்.
PM-eBus Sewa திட்டத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன - ஒன்று நகரப் பேருந்து சேவைகளை அதிகரிக்கவும் மற்றொன்று Green Urban Mobility Initiatives கீழ் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல். இத்திட்டத்தின் கீழ் இமைக்கப்படும் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்குவதற்கும், பேருந்து நடத்துனர்களுக்கு சம்பளம் கொடுப்பதும் மாநிலங்கள் அல்லது நகரங்களின் நிர்வாகத்தின் பொறுப்பு.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications