கடந்த ஜூலை 23-ஆம் தேதி அன்று தக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் விதமாக பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் ஸ்கீம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான பதிவு அக்டோபர் 12-ஆம் தேதி துவங்கியது. பதிவு தொடங்குவதற்கு முன்னதாக 193 நிறுவனங்களால் 90,800 இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்ட போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Jubilant Foodworks, Maruti Suzuki India, Eicher Motors, Larsen & Toubro Ltd., Muthoot Finance மற்றும் Reliance Industries போன்ற முக்கிய நிறுவனங்கள் இந்தப் பயிற்சிகளை வழங்குகின்றன. நிறுவனங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சமர்ப்பிக்க அக்டோபர் 3-ஆம் தேதி வரை போர்டல் திறக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் ஸ்கீம் என்றால் என்ன?: பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் ஸ்கீம் என்பது இந்தியாவின் சிறந்த 500 நிறுவனங்களில் இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப்பை வழங்குவதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சியாகும். விண்ணப்பதாரர்கள் பணி அனுபவத்தைப் பெறவும், பல்வேறு தொழில்களில் பணிபுரிவதன் மூலம் முக்கிய திறன்களை மேம்படுத்தவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு 1 கோடி வேலைவாய்ப்புகள் வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி: விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும். 21 வயது முதல் 24 வயதுடைய இளைஞர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் அல்லது தொலைதூரக் கல்வித் திட்டங்களில் சேர்ந்துள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம், ஆனால் முழுநேர பணியாளர்கள் அல்லது மாணவர்கள் தகுதியற்றவர்கள். விண்ணப்பதாரர்கள் தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் ITI, பாலிடெக்னிக் நிறுவனத்தில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் எ.கா., BA, B.Sc., B.Com., BCA, BBA, B.Pharma போன்ற பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல இளைஞர்கள் 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: ஆதார் கார்டு, கல்விச் சான்றிதழ்கள், சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.
பின்வரும் பட்சத்தில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. 21 வயதுக்கு குறைவாக இருந்தால்.. இந்த திட்டத்திற்கு தகுதி பெற மாட்டார். அதேபோல நீங்கள் ஒரு முழு நேர ஊழியராகவோ அல்லது மாணவராகவோ இருந்தாலும் இந்த திட்டத்தில் இணைய முடியாது.
நீங்கள் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களான IISER, NID, IIIT அல்லது IIT போன்ற கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்கிறீர்கள் என்றால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. நீங்கள் ப்ரொபஷனல் டிகிரி முடித்திருந்தாலும் இந்த திட்டத்தில் இணைய முடியாது.
நீங்கள் NAPS அல்லது NATS இன் கீழ் பயிற்சி பெற்றவராக இருந்தாலும் விண்ணப்பிக்க முடியாது. 2023-2024 நிதியாண்டில் உங்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்தைத் தாண்டி இருந்தால் நீங்களும் தகுதியற்றவர்.
நீங்கள் அல்லது உங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மத்திய, மாநில அல்லது உள்ளூர் அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது பிற அரசு அமைப்புகளில் நிரந்தர பணியாளர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்க முடியாது.
நிறுவனங்களுக்கான விதிமுறைகள்: கடந்த 3 ஆண்டுகளில் செலவினங்களின் அடிப்படையில் சிறந்த 500 நிறுவனங்களை நிதி அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. இந்தப் பட்டியலில் இல்லாத நிறுவனங்களும் இன்டர்ன்ஷிப்களை வழங்கலாம். ஆனால் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும்.
PM இன்டர்ன்ஷிப் திட்டத்தின் நன்மைகள்: பயிற்சி பெறுபவர்களுக்கு 12 மாதங்கள் வரை மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும். மேலும் அரசாங்கம் ஒரு முறை மானியமாக ரூ.6,000 வழங்கும், இது இளைஞர்கள் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் சேர்ந்தவுடன் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு பயிற்சியாளரும் அரசாங்கத்தின் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள்.
PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு எவ்வாறு பதிவு செய்வது?:
ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ PM இன்டர்ன்ஷிப் இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: தேவையான விவரங்களை வழங்கவும்.
ஸ்டெப் 3: உங்கள் CV-ஐ உருவாக்கி, கிடைக்கக்கூடிய வாய்ப்புகளின் பட்டியலிலிருந்து உங்கள் இன்டர்ன்ஷிப் விருப்பங்களைச் சமர்ப்பிக்கவும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications