நாட்டின் நலிவுற்று விவசாயிகளுக்கு உதவும் வகையில் அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM-KISAN) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. மத்திய அரசின் திட்டமான PM கிசான் திட்டத்தின் மூலம் தற்போது 17 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விவசாயிகள் 18-வது தவணை எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். PM கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி 3 தவணைகளாக அதாவது நான்கு மாத இடைவெளியில் 2,000 ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கும் நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு PM கிசான் திட்டம் செயல்பட்டு வருகிறது. இது பிப்ரவரி 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை மூன்று சம தவணைகளில் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நேரடியாக (DBT) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. PM கிசான் திட்டத்திற்கு தகுதியுடைய விவசாயக் குடும்பங்களை அடையாளம் காண்பது மாநில அரசின் பொறுப்பாகும்.
பிரதமர் நரேந்திர மோடி, PM கிசான் திட்டத்தின் 17-வது தவணையை ஜூன் 18, 2024 அன்று வெளியிட்டார். எனவே, அடுத்த தவணை 2024-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
PM கிசான் தவணை நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?:
ஸ்டெப் 1: முதலில் https://pmkisan.gov.in-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: பதிவு எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை என்டர் செய்யவும். பதிவு எண் தெரியாவிட்டால், மொபைல் நம்பர் அல்லது ஆதார் நம்பரைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
ஸ்டெப் 3: நீங்கள் பதிவுசெய்த மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
ஸ்டெப் 4: இதன் மூலம் நீங்கள் தவணை நிலையைச் சரி பார்க்கலாம்.
PM கிசான் போர்ட்டல் படி, இந்தத் திட்டத்திற்கு பதிவு செய்த விவசாயிகளுக்கு eKYC கட்டாயம் என்று இணையதளம் கூறுகிறது. பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYCக்கு, அருகிலுள்ள CSC மையங்களைத் தொடர்புகொள்ளவும். OTP அடிப்படையிலான eKYC PM கிசான் போர்ட்டல் வழியாகச் செய்யலாம்.
PM கிசான் திட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் பின்வரும் மூன்று eKYC முறைகளில் இருந்து தேர்வு செய்யலாம்.
PM கிசான் போர்ட்டல் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் மூலம் கிடைக்கும், OTP-அடிப்படையிலான e-KYC.
பயோமெட்ரிக் அடிப்படையிலான e-KYC (மாநில சேவா கேந்திராக்கள் (SSKகள்) மற்றும் பொது சேவை மையங்கள் (CSCகள்) மூலம் வழங்கப்படுகிறது.
முகம் சார்ந்த இ-கேஒய்சி (பிஎம் கிசான் மொபைல் செயலி மூலம் அணுகலாம், இது மில்லியன் கணக்கான விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது).
தவணைத் தொகை தாமதத்தை தவிர்க்கவும் தவணைத் தொகை வராமல் இருப்பதை தவிர்க்கவும் இ-கேஒய்சி செயல்முறையை முடிப்பது முக்கியம்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications