பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா(PM - KISAN) திட்டத்தின் 18-வது தவணையை அக்டோபர் 05-ஆம் தேதியான இன்று அரசாங்கம் வெளியிடவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள 9.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.2,000 வழங்குவதற்காக ரூ.20,000 கோடியை அரசாங்கம் செலவழிக்கிறது. இதற்கு முன் வந்த 17-வது தவணை ஜூன் 18, 2024 அன்று வழங்கப்பட்டது, இதன் மூலம் சுமார் 9.25 கோடி விவசாயிகள் ரூ.2,000 தொகையைப் பெற்றனர். அதாவது கூடுதலாக 25 லட்சம் விவசாயிகள் இப்போது PM கிசான் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
PM கிசான் திட்டம் யாருக்காக வழங்கப்படுகிறது?: PM கிசான் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை இலக்காகக் கொண்டு, அவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாயை 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. அதாவது 4 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இது நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 2 ஹெக்டேர் வரை மட்டுமே நிலம் வைத்திருக்க வேண்டும்.

PM கிசான் திட்டத்திற்கான தகுதியை எவ்வாறு சரிபார்க்கலாம்?: விவசாயிகள் ஏற்கனவே PM கிசான் திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தாலும்.. தங்களுக்கு நிதி உதவி கிடைக்குமா என்பதை எளிதில் சரி பார்த்துக் கொள்ளலாம். அதற்கு கீழ்க்காணும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றலாம்.
ஸ்டெப் 1: முதலில் அதிகாரப்பூர்வ PM கிசான் இணையதளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: "Beneficiary list" என்ற பக்கத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 3: உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தின் விவரங்களை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க "Get Report" என்பதைக் கிளிக் செய்யவும். இது தவிர, உள்ளூர் ஊராட்சிகளிலும் பயனாளிகள் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும்.
PM கிசான் திட்டத்தில் இருந்து பேமெண்ட்டுகளைத் தொடர்ந்து பெற, உங்கள் eKYC-ஐ எவ்வாறு நிறைவு செய்வது?: eKYC-ஐ முடிக்க மொத்தம் மூன்று வழிகள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
OTP அடிப்படையிலான eKYC: OTP அடிப்படையிலான eKYC-ஐச் செயல்படுத்த, விவசாயிகள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை வைத்திருக்க வேண்டும்.
ஸ்டெப் 1: முதலில் PM கிசான் போர்ட்டலுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: இணையதளத்தின் மேல் வலது மூலையில் உள்ள "e-KYC" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: உங்கள் OTP-யைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் ஆதார் நம்பரை என்டர் செய்து, உங்கள் eKYC செயல்முறையை முடிக்கவும்.
பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC: பயோமெட்ரிக் eKYC ஆனது நான்கு லட்சத்திற்கும் அதிகமான பொது சேவை மையங்கள் (CSC), மற்றும் பல்வேறு மாநில சேவா கேந்திராக்கள் (SSK) மூலம் விவசாயிகளின் வீட்டுக்கு அருகிலேயே கிடைக்கிறது.
உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள CSC மையங்களைப் பார்வையிட https://locator.csccloud.in/ என்ற இணையத்தளத்திற்குச் செல்லலாம். ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பைப் பயன்படுத்தி பயோமெட்ரிக் அங்கீகாரத்தைச் செய்ய CSC/SSK ஆபரேட்டர் உங்களுக்கு உதவுவார்.
More From GoodReturns

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications