பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM கிசான்) என்ற திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி ஒரே தவணையில் வழங்கப்படுவதில்லை. மாறாக 3 சம தவணைகளாக ரூ. 2000 வீதம் வழங்கப்படுகிறது.
இந்தத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. PM கிசான் திட்டம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 18 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 18-வது தவணை அக்டோபர் 5, 2024-அன்று வெளியானது. அதன் பிறகு 19-வது தவணை எப்போது வரும்? என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

PM கிசான் 19வது தவணை எதிர்பார்க்கப்படும் தேதி: 19-வது தவணை பிப்ரவரி 2025-ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் இன்னும் இது தொடர்பான தேதியை உறுதிப்படுத்தவில்லை. PM கிசான் திட்டத்தின் நிதி உதவி பொதுவாக 4 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். இது ஒரு நிலையான அட்டவணையை பின்பற்றி வழங்கப்பட்டு வருகிறது. அதை வைத்துப் பார்க்கும்போது பிப்ரவரி முதல் வாரத்தில் 19-வது தவணை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
PM கிசான் திட்டத்திற்கான தகுதியை எவ்வாறு சரிபார்க்கலாம்?: விவசாயிகள் ஏற்கனவே PM கிசான் திட்டத்திற்கு விண்ணப்பித்திருப்பீர்கள். அப்படியானால் உங்களுக்கு நிதியுதவி கிடைக்குமா? என்பதை கீழ்காணும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஸ்டெப் 1: முதலில் அதிகாரப்பூர்வ PM கிசான் இணையதளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: "Beneficiary list" என்ற பக்கத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 3: உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தின் விவரங்களை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க "Get Report" என்பதைக் கிளிக் செய்யவும். இது தவிர, உள்ளூர் ஊராட்சிகளிலும் பயனாளிகள் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும்.
PM கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?: விவசாயிகள் PM கிசான் திட்டத்திற்கு ஆன்லைனில் அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் PM கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் அதிகாரப்பூர்வ PM கிசான் இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: அதன் பிறகு "New Farmer Registration" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: ஆதார் நும்பர், மாநிலம், மாவட்டம் மற்றும் வங்கி தகவல் போன்ற தேவையான விவரங்களை நிரப்பவும்.
ஸ்டெப் 4: படிவத்தை சமர்ப்பித்து, எதிர்கால குறிப்புக்காக ஒரு நகலை சேமிக்கவும்.


Click it and Unblock the Notifications