பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM கிசான்) திட்டத்தின் 19-வது தவணை பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 24 அன்று பீகாரின் பாகல்பூருக்கு செல்ல உள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது இவர் 18-வது தவணையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
PM கிசான் திட் டம் ஏழை எளிய விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்காக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் 9.4 கோடி விவசாயிகள் இதுவரையில் 20,000 கோடி பெற்றுள்ளனர்.

PM கிசான் திட்டம் என்றால் என்ன?: பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டம் என்பது விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்காக அரசு வழங்கும் நிதியுதவி திட்டமாகும். இந்தத் திட்டத்திற்கு தகுதி பெறும் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது ஆண்டுதோறும் 3 தவணைகளாக 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூலை வரையில் ஒரு முறையும், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையில் ஒரு முறையும், டிசம்பர் முதல் மார்ச் வரையில் ஒரு முறையும் என 3 முறை பயணிகளின் வங்கி கணக்கிற்கு 2000 ரூபாய் மாற்றப்படுகிறது.
இந்தத் திட்டம் முதன்முதலாக 2019-ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் அப்போது நிதி அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் மூலமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
PM கிசான் திட்டத்திற்கான தகுதி: பிஎம் கிசான் திட்டத்தின் 19-வது தவணை பெற ஒருவர் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். PM கிசான் திட்டத்தில் பலன் பெற இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், சாகுபடி செய்வதற்கு சொந்தமாக நிலம் வைத்திருக்க வேண்டும். சிறு அல்லது குரு விவசாயியாக இருக்க வேண்டும். ஓய்வூதியம் பெறுபவராக இருக்கக் கூடாது. வருமான வரி தாக்கல் செய்பவராக இருக்கக் கூடாது. நிறுவன நிலங்களின் உரிமையாளராக இருக்கக் கூடாது.
PM கிசான் திட்டத்தின் e-KYC: இத்திட்டத்தின் மூலம் பணம் பெற விவசாயிகள் e-KYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு e-KYC செயல்முறை கட்டாயமாகும். PM கிசான் இணையதளம் வழியாக OTP அடிப்படையிலான eKYC-ஐ முடிக்கலாம் அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC-க்கு அருகிலுள்ள பொது சேவை மையத்தை (CSC) அணுகலாம்.
OTP அடிப்படையிலான e-KYC-க்கான ஸ்டெப்ஸ்:
ஸ்டெப் 1:அதிகாரப்பூர்வ PM கிசான் யோஜனா இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: "Farmers Corner" பகுதிக்குச் சென்று e-KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: உங்கள் ஆதார் நம்பர் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை என்டர் செய்யவும். OTP சரிபார்ப்பிற்காக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். e-KYC செயல்முறையை முடிக்க பெறப்பட்ட OTP-ஐ என்டர் செய்யவும்.
பயோமெட்ரிக் அடிப்படையிலான e-KYC செயல்முறை:
ஸ்டெப் 1: உங்கள் அருகிலுள்ள பொது சேவை மையம் அல்லது மாநில சேவா கேந்திராவிற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: e-KYC செயல்முறையைத் தொடங்க CSC ஆபரேட்டரை அணுகவும்.
ஸ்டெப் 3: சரிபார்ப்பு நோக்கங்களுக்காக உங்கள் ஆதார் கார்டு மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பரை வழங்கவும். CSC ஆபரேட்டர் உங்கள் கைரேகை அல்லது கருவிழியை ஸ்கேன் செய்வதன் மூலம் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பெறுவார். அங்கீகாரம் வெற்றிகரமாக முடிந்ததும், உங்கள் e-KYC செயல்முறை முடிக்கப்படும்.
பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் பயனாளியாக நீங்கள் இருக்கிறீர்களா? என்பதை ஆன்லைனில் சரிபார்க்க, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ பிரதம மந்திரி கிசான் யோஜனா இணையதளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: "Beneficiary Status" பக்கத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 3: அதன் பின் "Beneficiary Status" என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 5: "Get Data" என்பதை கிளிக் செய்யவும்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications