PM கிசான் திட்டத்தில் 2000 ரூபாய் வரவில்லையா? இந்த 5 விஷயத்தை உடனே செக் பண்ணுங்க! லேட் பண்ணிடாதீங்க!

எண்ணற்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பேருதவியாக அமைந்தது பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் கொண்டுவரப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம். PM கிசான் திட்டம் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு தகுதியுள்ள விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவி மொத்தமாக வழங்கப்படாமல் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. PM கிசான் தொடங்கியதில் இருந்து இதுவரையில் 22 தவணைகள் வரை வழங்கப்பட்டுள்ளன. அடுத்ததாக 23-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

PM கிசான் திட்டம் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று முதன்முதலாக தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள தகுதியான விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000 பெற்று வருகின்றனர். ஒவ்வொரு 4 மாதத்திற்கும் ஒருமுறை சுமார் 3 தவணைகளாக பணம் வழங்கப்பட்டு வருகிறது.

PM கிசான் திட்டத்தின் மூலமாக இதுவரையில் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக கிடைக்கும் ரூ. 2,000 பணத்தை இன்றளவும் விவசாயிகள், விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

PM கிசான் திட்டத்தில் 2000 ரூபாய் வரவில்லையா? இதை உடனே செக் பண்ணுங்க!

அப்படி இருக்கையில் பல விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பித்தும், தவணைத் தொகை வராமல் கவலைப்படுகின்றனர். ஒரு சில காரணங்களால் இது போன்ற தாமதங்கள் நிகழலாம். எனவே சிக்கலைத் தவிர்த்து தடையின்றி தவணைத் தொகை பெற கீழ்காணும் 5 விஷயங்களை உடனடியாக கவனிக்க வேண்டும்.

இ-கேஒய்சி சரிபார்ப்பு: PM கிசான் திட்டத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகள் அனைவரும் இ-கேஒய்சி செயல்முறையை கட்டாயம் செய்திருக்க வேண்டும். இன்னும் உங்களுடைய கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்யாமல் இருந்தால், தவணைத் தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். எனவே இதை ஆன்லைனில் சுலபமாக செய்து முடிக்கலாம். ஒருவேளை நீங்கள் உங்கள் கேஒய்சி ஆவணங்களை அப்டேட் செய்யாமல் இருந்தால், உடனே செய்து முடியுங்கள்.

வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்கவும்: உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் கார்டு இணைந்திருக்கிறதா? என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் அரசு DBT டிரான்ஸ்பர் மூலமாக பணத்தை அனுப்புகிறது. இது போன்ற செயல்முறைக்கு கட்டாயம் வங்கி கணக்குடன் ஆதார் கார்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

நில ஆவணங்களில் பிரச்சனை: உங்கள் பெயரில் உள்ள நிலத்தின் பட்டா, சிட்டா போன்றவற்றில் அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும். நிலம் தொடர்பான ஆவணங்களில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால், அப்போதும் பணம் வருவதில் சிக்கல் ஏற்படலாம்.

விண்ணப்பத்தின் போது வழங்கப்படும் விபரங்கள்: பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது, ஒரு சிறு தவறு இருந்தாலும் பணம் வருவதில் சிக்கல் ஏற்படலாம். உதாரணமாக தவறான வங்கி கணக்கு எண் அல்லது IFSC கோடு போன்றவை உங்கள் அக்கவுண்டுக்கு பணம் வருவதில் தாமதத்தை கொண்டு வரும். எனவே இது போன்ற விவரங்களை வழங்கும்போது சரியாக வழங்குங்கள். அதோடு உங்களுடைய வங்கி கணக்கில் ஆதார் கார்டு இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை கவனிக்கும் முன் உங்கள் ஆதார் கார்டிலும், வங்கி கணக்கிலும் ஒரே பெயர் இருக்கிறதா? என்பதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

தகுதி விதிகளை மீறுதல்: பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிக்க சில தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். உதாரணமாக ஒரு விவசாயி 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு முன்னர் இடம் வாங்கியவராக இருக்க வேண்டும். பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு பிறகு இடம் வாங்கியவராக இருந்தால், இந்தத் திட்டத்திற்கு தகுதி பெற முடியாது. எனவே அக்கவுண்டுக்கு பணம் வராத பட்சத்தில், உங்களுடைய பெயர் லிஸ்டில் இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+