2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு விவசாயிகளுக்கு முக்கியமான நிதி உதவி திட்டமாக மாறி இருக்கும் திட்டம் தான் "பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா" திட்டம். இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த திட்டம் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குக்கு மாற்றப்படுகிறது. 17-வது தவணை வரை இதுவரையில் விவசாயிகளுக்கு PM கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 18-வது தவணை எப்போது வழங்கப்படும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு தற்போது மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 17 தவணைகளை அரசாங்கம் இதுவரை வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் மாதம் மூன்றாவது முறையாக பதவியேற்றதும், PM கிசான் திட்டத்தின் 17-வது தவணையை வழங்குவதாக அறிவித்தார், இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகளுக்கு சுமார் ரூ.20,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த தவணையை அக்டோபர் மாதத்தில் வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. PM கிசான் இணையதளத்தின்படி, 18வது தவணையை பிரதமர் மோடி அக்டோபர் 5, 2024 அன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் பயனாளியாக நீங்கள் இருக்கிறீர்களா? என்பதை ஆன்லைனில் சரிபார்க்க, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ பிரதம மந்திரி கிசான் யோஜனா இணையதளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: "Beneficiary Status" பக்கத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 3: அதன் பின் "Beneficiary Status" என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: ஆதார் நம்பர் அல்லது அக்கவுண்ட் நம்பர் போன்ற தேவையான விவரங்களை வழங்கவும்.
ஸ்டெப் 5: பின்னர் "Get Data" என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: உங்கள் பயனாளி நிலை திரையில் காண்பிக்கப்படும்.
KYC செயல்முறை: PM கிசான் திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு டிஜிட்டல் வடிவிலான eKYC செயல்முறை கட்டாயமாகும். தடையின்றி நிதி உதவியை பெறுவதற்கு அனைத்து விவசாயிகளும் தங்கள் eKYC-ஐ உடனடியாக முடிக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டது.
இதன் நோக்கம், சரியான பயனாளிகளின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு பிரதம மந்திரி கிசான் திட்டத்திலிருந்து நேரடி பணப் பரிமாற்றத்தை வழங்குவதாகும். இதன் மூலம், எந்தவித இடைத்தரகர் ஈடுபாடும் இல்லாமல் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு PM கிசான் இணையதளம் வழியாக OTP அடிப்படையிலான eKYC-ஐ முடிக்கலாம் அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC-க்கு அருகிலுள்ள பொது சேவை மையத்தை (CSC) அணுகலாம்.
OTP அடிப்படையிலான e-KYC-க்கான ஸ்டெப்ஸ்:
ஸ்டெப் 1:அதிகாரப்பூர்வ PM கிசான் யோஜனா இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: "Farmers Corner" பகுதிக்குச் சென்று e-KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: உங்கள் ஆதார் நம்பர் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை என்டர் செய்யவும். OTP சரிபார்ப்பிற்காக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். e-KYC செயல்முறையை முடிக்க பெறப்பட்ட OTP-ஐ என்டர் செய்யவும்.
பயோமெட்ரிக் அடிப்படையிலான e-KYC செயல்முறை:
ஸ்டெப் 1: உங்கள் அருகிலுள்ள பொது சேவை மையம் அல்லது மாநில சேவா கேந்திராவிற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: e-KYC செயல்முறையைத் தொடங்க CSC ஆபரேட்டரை அணுகவும்.
ஸ்டெப் 3: சரிபார்ப்பு நோக்கங்களுக்காக உங்கள் ஆதார் கார்டு மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பரை வழங்கவும். CSC ஆபரேட்டர் உங்கள் கைரேகை அல்லது கருவிழியை ஸ்கேன் செய்வதன் மூலம் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பெறுவார். அங்கீகாரம் வெற்றிகரமாக முடிந்ததும், உங்கள் e-KYC செயல்முறை முடிக்கப்படும்.


Click it and Unblock the Notifications