விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் சில நிதி உதவி திட்டங்களும் அடங்கும். அப்படி வழங்கப்படும் திட்டங்களில் ஒன்றுதான் "பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் (PM கிசான்)". இந்த திட்டத்தின் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை ஒரே தவணையில் வழங்கப்படாமல் 3 தவணைகளாக அதாவது ரூ.2000 என்ற விதத்தில் 3 சமதவணைகளாக விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் ஒரு முறை நேரடி பலன் பரிமாற்ற (DBT) முறையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.
PM கிசான் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரையில் 18 தவணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 19-வது தவணை எப்போது வரும்? என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

19-வது தவணை எப்போது கிடைக்கும்?: 18 வது தவணை அக்டோபர் மாதம் 2024-ஆம் ஆண்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. வழக்கமாக 4 மாதத்திற்கு ஒருமுறை இந்த தொகை செலுத்தப்படுகிறது. இந்நிலையில் 19-வது தவணை பிப்ரவரி மாதத்தில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்னும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும், பிப்ரவரி 28ஆம் தேதி அன்று 19-வது தவணை வெளியிடப்படுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக சில வியூகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டும் இதே தேதியில் தான் 16-வது தவணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் பார்க்கும்போது இந்த முறையும் பிப்ரவரி 28-ஆம் தேதி 19-வது தவணை வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் இணைவதற்கான தகுதி: இந்த திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் பலனளிக்காது. குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு மட்டும் தான் இந்தத் திட்டத்தின் பலன்கள் கிடைக்கும். அதாவது அரசு வேலைகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் PM கிசான் திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர்கள். ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே PM கிசான் திட்டத்தின் நிதி உதவியை பெற முடியும். அதோடு ஒவ்வொரு தவணையும் சரியாக பெற விவசாயிகள் e-KYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும். அதோடு பிற பகுதிகளையும் விண்ணப்பிக்கும் நபர் பூர்த்தி செய்ய வேண்டும்.
PM கிசான் திட்டத்தின் மூலம் பலன் பெற பலர் தற்போது விண்ணப்பித்திருப்பீர்கள். உங்களுக்கு திட்டத்தில் நிதியுதவி கிடைக்குமா என்பதை எளிதில் ஆன்லைனில் சரி பார்க்கலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
PM கிசான் திட்டத்திற்கான தகுதியை எவ்வாறு சரிபார்க்கலாம்?: விவசாயிகள் ஏற்கனவே PM கிசான் திட்டத்திற்கு விண்ணப்பித்திருப்பீர்கள். அப்படியானால் உங்களுக்கு நிதியுதவி கிடைக்குமா? என்பதை கீழ்காணும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஸ்டெப் 1: முதலில் அதிகாரப்பூர்வ PM கிசான் இணையதளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: "Beneficiary list" என்ற பக்கத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 3: உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தின் விவரங்களை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க "Get Report" என்பதைக் கிளிக் செய்யவும். இது தவிர, உள்ளூர் ஊராட்சிகளிலும் பயனாளிகள் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும்.
உதவிக்கான ஹெல்ப்லைன்: PM கிசான் தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் அல்லது கேள்விகளுக்கு, விவசாயிகள் பின்வரும் தொடர்பு விவரங்களை பயன்படுத்தலாம்.
மின்னஞ்சல்: [email protected]
கட்டணமில்லா உதவி எண்: 155261 அல்லது 1800115526
நேரடி உதவி எண்: 011-23381092


Click it and Unblock the Notifications