பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM கிசான்) திட்டம் என்பது நம் நாட்டில் இருக்கும் நலிவுற்ற விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் தகுதி பெறும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. அதற்காக ஆண்டுக்கு 6,000 ரூபாய் 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. PM கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 17 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது 18-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நாளுக்கு நாள் PM கிசான் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அது என்னவென்றால் ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று. இதற்கான விடையை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் PM கிசான் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்?: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நிதிச் சுமைகளைக் குறைக்க மத்திய அரசின் ஒரு முக்கிய முயற்சியாக உள்ளது. ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே PM கிசான் திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள். விவசாயக் குடும்பங்களாக இருந்தால் தலைமைப் பொறுப்பில் இருக்கும் விவசாயிக்கு மட்டுமே இந்த திட்டத்தின் பலன்கள் பொருந்தும்.
அதாவது விவசாய நில ஆவணங்களில் யாருடைய பெயர் உள்ளதோ? அந்த நபருக்கு மட்டுமே இந்த திட்டத்தின் பலன்கள் சென்றடையும். எனவே விவசாய குடும்பத்தில் இருக்கும் குடும்ப தலைவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
சமமான விநியோகத்தை உறுதி செய்தல்: ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு பயனாளி என்ற விதியை செயல்படுத்துவதன் மூலம் PM கிசான் திட்டத்தின் நன்மைகள் ஒரே குடும்பத்தின் மூலம் பெறப்படுவதைத் தவிர்க்கவும், நிதியுதவி தகுதியான அனைத்து பெறுநர்களையும் சென்றடைவதை உறுதி செய்யவும், இத்தகைய விதிமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பயனாளி என்ற PM கிசான் திட்டத்தின் விதி வெளியில் இருந்து பார்ப்பதற்கு கட்டுப்பாடாக தோன்றினாலும் சமமான வினியோகம் மற்றும் விவசாயிகளுக்கான ஆதரவில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. நாடு முழுவதும் உள்ள நலிவுற்ற விவசாயிகளுக்கு உதவுவதற்கான இந்த திட்டம் பலதரப்பட்ட விவசாயிகளையும் சென்றடைவதை உறுதி செய்கிறது.


Click it and Unblock the Notifications