விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! ஜூன் மாதத்திற்குள் இதை செய்யலன்னா ரூ.2000 கிடைக்காது!

நாட்டின் நலிவுற்ற விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட அசத்தலான அரசு திட்டம் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா. இதை பிஎம் கிசான் திட்டம் என்றும் கூறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள் வருடத்திற்கு 6,000 ரூபாய் நிதியுதவி பெற்று வருகின்றனர். ஒரே தவணையாக இல்லாமல் மூன்று சம தவணைகளாக அதாவது ரூ. 2000 என்ற வீதத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் தொகை வரவு வைக்கப்படுகிறது.இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதியை விவசாயிகள் தங்கள் சாகுபடி பணிகளுக்காகவும், விதை மற்றும் உரம் வாங்குவதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

பிஎம் கிசான் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரையில் 22 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. 22-வது தவணையை அசாம் மாநிலம் குவஹாத்தியில், மார்ச் 13-ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். 23வது தவணை எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனாலும் 9.46 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்கள் 23-வது தவணை பெறுவதற்கு ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

23வது தவணை எதிர்பார்க்கப்படும் தேதி: முன்பே கூறியது போல் இன்னும் தேதி வெளியாகவில்லை. இருந்தாலும் முந்தைய வருடங்களில் பணம் வழங்கப்பட்ட மாதத்தின் அடிப்படையில் தேதியை யூகிக்க முடிகிறது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான மாதங்களுக்கு ஒரு தவணையும், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை ஒரு தவணையும், டிசம்பர் முதல் மார்ச் வரையிலான மாதத்திற்காக ஒரு தவணையும் என 3 தவணையாக ரூ. 2,000 வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! ஜூன் மாதத்திற்குள் இதை செய்யலன்னா ரூ.2000 கிடைக்காது!

இதில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்திற்காக 23-வது தவணை வரவிருக்கிறது. முந்தைய வருடங்களில் பணம் வழங்கப்பட்டதை வைத்து பார்க்கும் போது ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்த பணம் விவசாயிகளின் அக்கவுண்டுக்கு வரும் வாய்ப்புள்ளது.

சாகுபடிக்கு ஏற்ற நிலம் கொண்ட விவசாயிகள், இந்தத் திட்டத்தின் கீழ் பலனடையலாம். அதேபோல விவசாய நிலங்களை வைத்துக்கொண்டு விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல் வேறு விஷயங்களுக்காக பயன்படுத்துபவர்கள், சிறிய நிலம் கொண்டவர்கள் இத்திட்டத்திற்கு தகுதி பெற முடியாது.

தகுதி பெறும் விவசாயிகள் ஆன்லைன் மூலமாக எளிதில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்து முடித்தவுடன் பயனாளர்களின் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? என்பதையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். இதை தெரிந்து கொள்ள பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரபூர்வ pmkisan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு "Beneficiary List" கொடுக்கப்பட்டிருக்கும். இதில் உங்கள் பெயர் இருந்தால் நீங்களும் தொடர்ந்து ரூ.2,000 தவணை பெறலாம்.

பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பித்தால் மட்டும் போதாது. சரியாக தவணை தொகை பெறுவதற்கு நில ஆவண விவரங்களை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும், கண்டிப்பாக உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் நம்பரை இணைத்திருக்க வேண்டும் மற்றும் டிஜிட்டல் கேஒய்சி செயல்முறையை சரியாக செய்து முடித்திருக்க வேண்டும். இல்லை என்றாலும் தொகை உங்கள் கணக்கிற்கு வராது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+