தகுதியுடைய விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக இந்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த முயற்சிகளில் "பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா" திட்டமும் ஒன்று. இதன் மூலம் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதுவரையில் 17 தவணைகள் PM கிசான் திட்டத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது 18-வது தவணை இன்னும் 5 நாட்களில்.. அதாவது அக்டோபர் 5, 2024 அன்று கிரெடிட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PM கிசான் திட்டத்தின் 18-வது தவணை உங்கள் அக்கவுண்டில் கிரெடிட் செய்யப்பட்டு விட்டதா? என்பதை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்று பார்ப்போம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, 18-வது தவணை அக்டோபர் 5, 2024 அன்று வெளியிடப்படும். இந்தத் தேதியில், தவணைத் தொகை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு DBT முறையின் மூலம் மாற்றப்படும்.

ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும் 6,000 ரூபாய் உதவித்தொகை 4 மாத இடைவெளியில் 2,000 ரூபாய் என்ற வீதத்தில் 3 தவணையாக வழங்கப்படுகிறது.
உங்கள் அக்கவுண்டில் PM கிசான் திட்டத்தின் பணம் கிரெடிட் செய்யப்பட்டு விட்டதா என்பதை எவ்வாறு சரி பார்க்கலாம்?:
மெத்தெட் 1: PM கிசான் யோஜனா திட்டத்தின் பயனாளிகள் தவணை தொகையை பெறும்போது SMS மூலம் அறிவிப்பைப் பெறுவார்கள். அக்டோபர் 5-ஆம் தேதி அன்று உங்கள் வங்கி அல்லது அரசாங்கத்திடமிருந்து உங்கள் கணக்குக்கு பணம் அனுப்பப்பட்ட செய்தி வந்துள்ளதா? என்பதை சரி பாருங்கள். அப்படி வந்திருந்தால் இதை வைத்து மங்கி கணக்குக்கு பணம் வந்ததை தெரிந்து கொள்ளலாம்.
மெத்தெட் 2: ஒருவேளை உங்களுக்கு SMS அறிவிப்புகள் வரவில்லை என்றால்.. உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பேலன்ஸ் விவரங்களை அருகில் உள்ள ஏடிஎம்மிற்குச் சென்று, சரி பார்க்கலாம். கூகுள் பே மற்றும் போன் பே போன்ற செயலிகளை நீங்கள் பயன்படுத்தினால் இதன் மூலமாகவும் பேலன்ஸ் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மெத்தெட் 3: ஏடிஎம் கார்டு இல்லாத விவசாயிகள், தங்களின் தவணை நிலையைச் சரிபார்க்க வங்கிக்குச் செல்லலாம். உங்கள் பாஸ்புக்கை வங்கிக்கு கொண்டு சென்று, அங்கு உங்கள் பேலன்ஸ் குறித்த விவரங்களைக் கேட்கலாம்.
அரசு வழங்கும் இந்த நிதி உதவி ஒரு குடும்பத்திற்கு ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும். விவசாய நிலத்தை வைத்துள்ள முதன்மை விவசாயி மட்டுமே PM கிசான் திட்டத்தின் நலனைப் பெற முடியும். அதுவும் தற்போது PM கிசான் திட்டத்திற்கான விதிமுறைகளில் கடுமையான மாற்றங்களை அரசாங்கம் செய்து வருகிறது. இதன் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் தொகை கிடைக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
தவணைத் தொகையை பெறுவதற்கு டிஜிட்டல் இ-கேஒய்சி செயல் முறையை முடிப்பது முக்கியம். OTP அடிப்படையிலான இ-கேஒய்சி, பயோமெட்ரிக் அடிப்படையிலான இ-கேஒய்சி போன்றவற்றை செய்து விவசாயிகள் இந்த செயல் முறையை முடிக்கலாம்.
இ-கேஒய்சி செயல் முறையை முடிக்காத விவசாயிகளுக்கு தங்களுடைய தவணை தொகை கிடைப்பதில் தாமதங்கள் அல்லது தவணை கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது. எனவே முன்கூட்டியே இந்த செயல் முறையை முடிப்பது தடையின்றி தொகையைப் பெறுவதை உறுதி செய்யும்.


Click it and Unblock the Notifications