நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காகவும், மேலும் ஆண்டு வருமானத்தை அதிகரிக்கும் விதமாகவும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் "பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM - KISAN)" திட்டம். இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற விவசாயிகள் ஆண்டு வருமானத்தைப் பெற முடியும். PM-கிசான் திட்டம் பல்வேறு விவசாயிகளுக்கு பலன் தரும் வகையில் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக 2019-ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் இதுவரை 18 தவணைகளாக தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலர் தற்போது 19-ஆம் தவணையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
PM கிசான் திட்டத்தின் மூலம் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மொத்தம் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ரூ. 2000 என்ற வீதத்தில் 3 தவணைகளாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது. மேலும் இந்தத் தொகை 4 மாத இடைவெளியில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

அண்மையில் வெளியான செய்தி நிறுவனத்தின் தகவல்படி இந்தத் திட்டத்தின் 19-வது தவணை அக்டோபர் மாதத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தேதி வெளியிடப்படவில்லை. ஜூன் 27-ஆம் தேதி அன்று PM கிசான் திட்டத்தின் 18-வது தவணையை வாரணாசியில் பிரதமர் மோடி வெளியிட்டார்.
3 தவணைகளாக மட்டுமே ஒரு ஆண்டுக்கு தொகை வழங்கப்படுகிறது. அப்படியானால் 18-வது தவணை என்று கூறப்படுவது எதனால்? என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.18-வது தவணை என்று சொல்லப்படுவது, இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கொடுக்கப்பட்ட தவணையின் எண்ணிக்கை ஆகும். அதாவது 2019-ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதிலிருந்து இன்றைய நாள் வரை 18 தவணைகளாக விவசாயிகளுக்கு தொகை வழங்கப்பட்டுள்ளது.
PM கிசான் திட்டத்தின் தவணை தொகையை எப்படி சரி பார்ப்பது?: விவசாயிகளுக்குத் தெரிவிக்க, இந்திய அரசு பிரத்யேக இணையதளத்தை அமைத்துள்ளது. விவசாயிகள் தங்கள் பிரதமர் கிசான் யோஜனா தவணைகளின் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை இங்கே காணலாம்.
ஸ்டெப் 1: PM கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: ஹோம் பேஜை ஸ்க்ரோல் செய்து "Know Your Status" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: உங்கள் பதிவு எண்ணை என்டர் செய்து "Get OTP" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் நிலையைச் சரிபார்க்கலாம். உங்களிடம் பதிவு எண் இல்லையென்றால், "Know Your Registration Number" என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் தகவலைப் பெற உங்கள் மொபைல் நம்பர் அல்லது ஆதார் நம்பரை வழங்கவும்.
கடந்த பட்ஜெட்டில் PM கிசான் திட்டத்தின் உதவி தொகை 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவின. ஆனால் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
நாடு முழுவதும் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள், இது வரை மொத்தமாக ரூ.3.04 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை PM கிசான் திட்டத்தின் மூலம் பெற்றுள்ளனர். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.3.24 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications