பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM கிசான்) என்ற திட்டத்தின் மூலம் அரசு நாட்டில் உள்ள நலிவுற்ற விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. இன்று வரையில் இந்த திட்டத்தின் மூலம் ரூ.3.46 லட்சம் கோடிக்கு மேல் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சுமார் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு உதவி வருகிறது. PM கிசான் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரையில் 18 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது.
PM கிசான் திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு வருடத்தில் ரூ.2000 என்ற வீதத்தில் 4 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் தான் தொகை வரவு வைக்கப்பட்டது. அதேபோல இந்த வருடமும் பிப்ரவரி மாதத்தில் PM கிசான் திட்டத்தின் தவணைத் தொகை வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அரசு PM கிசான் திட்டத்தின் நிதியுதவியைப் பெற அரசு சில பதிவுகளை கட்டாயம் ஆக்கியுள்ளது. அதாவது 2024-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் முதல் பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் தொடர்ந்து நிதி உதவி பெற விவசாயிகள் ஃபார்மர் ரெஜிஸ்ட்ரி சிஸ்டத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செயல்முறைக்கு அரசாங்கம் 2025-ஆம் ஆண்டின் ஜனவரி 31-ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இந்த முயற்சி குறிப்பாக நில உரிமையை சரிபார்த்தல், மோசடியாக உரிமைக்கோரல்களை நீக்குதல் மற்றும் சலுகைகளை சரியான நபர்களுக்கு வழங்குதல் போன்ற காரணங்களுக்காக செய்யப்படவுள்ளது.
பதிவை முடிப்பதற்கான ஸ்டெப்ஸ்: விவசாயிகள் தங்கள் வசதிக்கு ஏற்ப பல்வேறு வழிகளை பயன்படுத்தி தங்கள் பதிவு செயல் முறையை முடிக்கலாம்.
ஆன்லைன் பதிவு: விவசாயிகள் அதிகாரப்பூர்வ போர்ட்டலை பார்வையிடுவன் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். அத்தியாவசிய ஆவணங்களில் அவர்களின் நிலப்பதிவு, ஆதார் கார்டு மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் ஆகியவை இருந்தால் போதும். எளிதில் பதிவு செயல்முறையை முடிக்கலாம்.
பொது சேவை மையங்கள்: மாற்றாக விவசாயிகள் தங்கள் பதிவு செயல்முறையை முடிக்க எந்த ஒரு பொது சேவை மையத்தை வேண்டுமானாலும் பார்வையிடலாம். ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர், நிலப்பதிவு ஆவணங்கள் போன்றவற்றை எடுத்துச் செல்வது முக்கியமாகும்.
விவசாயிகள் பதிவு முறையின் கீழ் பதிவு செய்வது, பிரதம மந்திரி கிசான் யோஜனாவைத் தாண்டிய பல நீண்டகால நன்மைகளை விவசாயிகளுக்கு வழங்குகிறது. இதனால் ஈ-கேஒய்சி செயல்முறையை செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும் பயிர் கடன்கள், காப்பீடு பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு இந்த பதிவு அவசியமாகும். 19-வது தவணை நெருங்கி வருவதால், விவசாயிகள் ஏராளமான நன்மைகளைப் பெற ஃபார்மர் ரெஜிஸ்ட்ரி சிஸ்டத்தில் பதிவை முடிப்பது கட்டாயமாகும்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications