PM கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் என்பது சிறு குறு விவசாயிகளை ஆதரிப்பதற்காக இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான விவசாயிகள் நிதி உதவியை பெற்று வருகின்றனர். PM கிசான் திட்டத்தின் கீழ் தகுதியுடைய ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.
சரி தற்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று.. அதற்கான விடையை முன்பே ஒரு பதிவில் பார்த்திருந்தோம். சிலருக்கு தங்களுடைய மனைவியின் பெயரில் இடம் இருந்தால் அவரும் இந்தத் திட்டத்திற்கு பயன்பெறலாமா? என்ற குழப்பம் இருக்கும். இது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்க உள்ளோம்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 17 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் 18-வது தவணை எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஒரு குடும்பத்தில் ஒரே ஒருவர் மட்டுமே PM கிசான் திட்டத்தின் பலன்களைப் பெற முடியும். ஒரு குடும்பத்தில் உள்ள விவசாய நிலம் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதோ? அவர் மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் நிதி உதவியைப் பெற முடியும்.
ஜூன் மாதம் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் PM கிசான் திட்டத்தின் 17-வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து தற்போது 18-வது தவணையை எதிர்பார்த்து விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் மாதத்திற்குள் 18-வது தவணை வழங்கப்படும் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிடவில்லை.
கணவன் மற்றும் மனைவி ஒரே குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில் PM கிசான் திட்டத்தின் பலன்களை பெற முடியாது. தற்போது PM கிசான் திட்டத்தின் கீழ் இருக்கும் பயனாளிகளின் தகுதியை ஆய்வு செய்ய அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அதேபோல PM கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் இ-கேஒய்சி செயல்முறையைமுடிக்க வேண்டும்.
எந்தவித தடையும் இல்லாமல் உதவித்தொகையை பெறுவதற்கு இகேஒய்சி செயல்முறையை செய்வது அவசியம். இந்த செயல்முறையை முடிக்காத விவசாயிகளுக்கு தாமதமாகவோ அல்லது தவணைத் தொகை வராமலோ போவதற்கு வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications