அரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகின்றது.

 

அந்த வகையில் விவசாயிகளுக்கு சில நலத்திட்டங்கள் உண்டு. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பலனடைந்த விவசாயிகள், பிரதான் கிசான் மன் தன் யோஜனாவின் மூலமும் பயனடையலாம்.

DHFL - பிராமல் குரூப் ஒப்பந்தம் ஓகே.. ஆனா ஒரு கண்டிஷன்.. NCLT அமைப்பு வைத்த கோரிக்கை..! DHFL - பிராமல் குரூப் ஒப்பந்தம் ஓகே.. ஆனா ஒரு கண்டிஷன்.. NCLT அமைப்பு வைத்த கோரிக்கை..!

இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 12 மாத தவணைகளாக மாதம் 3,000 ரூபாயினை பெறலாம்.

எவ்வளவு பிரிமீயம் செலுத்த வேண்டும்?

எவ்வளவு பிரிமீயம் செலுத்த வேண்டும்?

அரசின் இந்த திட்டத்திற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரையில் ஆகும். இந்த திட்டத்தில் இணையும் விவசாயி மாதத்திற்கு 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையில் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் இணைவதற்கு https://maandhan.in/ என்ற இணைய முகவரியில் செல்ல வேண்டும்.

என்னென்ன ஆவணங்கள்?

என்னென்ன ஆவணங்கள்?

அரசின் இந்த திட்டத்தில் இணைவதற்கு ஆதார், வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவற்றை வைத்து இணையலாம். இந்த திட்டத்தில் இணைவது மிக எளிதான விஷயம் தான். அதோடு இந்த திட்டத்தில் எவ்வளவு விரைவில் இணைகிறார்களோ அவ்வளவு அதிக பயன் கிடைக்கும். தாமதமாக இணையும் பட்சத்தில் அதிக பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

பிரிமீயம் எவ்வளவு?
 

பிரிமீயம் எவ்வளவு?

இந்த திட்டத்தில் 18 வயதில் ஒருவர் இணைகிறார் எனில் மாதம் 55 ரூபாய் செலுத்தினால் போதும், இதே 30 வயதில் இணைகிறார் என்றால், மாதம் 110 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதே 40 வயதிற்கு மேல் இணைக்கிறார் எனில் மாதம் 200 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம்

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம்

இதே பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் இணைய https://pmkisan.gov.in/ இணைய முகவரிக்கு செல்லுங்கள்.

இதில் கிசான் கடன் அட்டைக்கான படிவத்தினை பதிவிறக்கம் செய்யவும்.
உங்கள் நிலத்தின் ஆவணங்கள் மற்றும் பயிர் குறித்த விவரங்களுடன் படிவத்தை நிரப்பவும். அதன் பிறகு அருகில் உள்ள வங்கிக்கு சென்று அதனை ஒப்படைக்கவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM kisan yojana: now you can receive Rs.36,000 per year: check full details here

PM kisan yojana latest updates.. Now you can receive Rs.36,000 per year: check full details here
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X