தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்கா.. முதலீடு எவ்வளவு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய 7 மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது உலகின் மிகப்பெரிய ஜவுளித் துறை வணிகத்தினை செய்யும் முன்னணி நாடாக, இந்தியா தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இது உதவும் எனலாம்.

இது இந்தியாவிலும் ஜவுளித்துறையை வலுப்படுத்த உதவும் எனலாம். இது சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என பலவற்றையும் வலுப்படுத்தும். வேலை வாய்ப்பினையும் அதிகரிக்கும் எனலாம்.

நாளை வெளியாகவிருக்கும் தமிழ்நாடு பட்ஜெட் 2023.. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 அறிவிப்பு வருமா? நாளை வெளியாகவிருக்கும் தமிழ்நாடு பட்ஜெட் 2023.. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 அறிவிப்பு வருமா?

7 ஜவுளி பூங்காக்கள்

7 ஜவுளி பூங்காக்கள்

எல்லாவற்றிற்கும் மேலாக தொடர்ந்து இந்தியா பொருளாதாரத்திலும் இது முக்கிய பங்கு வகிக்கலாம். தமிழ் நாடு, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தான் இந்த (PM MITRA) ஜவுளி பூங்காக்கள் அமையவுள்ளன. இந்த ஜவுளி பூங்காக்கள் அதி நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஜவுளிப் பூங்காக்கள் மேக் இன் இந்தியாவுக்கு உதவிகரமாக அமையலாம். மொத்தத்தில் இந்திய ஜவுளித் துறைக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையலாம். இது பல்வேறு வகையான ஜவுளிகளை உலகளாவிய அளவுக்கு எடுத்து செல்ல உதவும். இது நாட்டின் வளர்ச்சியினையும் ஊக்குவிக்கும். இதன் மூலம் அன்னிய முதலீடுகளை மட்டும் அல்ல, உலகளாவிய உற்பத்தியாளர்களை ஈர்க்கவும் இந்த திட்டம் பயனுள்ள ஒன்றாக அமையலாம் .

சலுகைகள் என்ன?

சலுகைகள் என்ன?


இது குறித்து பிரதமர் மோடி அறிக்கையில் இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் உலகுக்காக தயாரிப்போம் திட்டங்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இவ்வாறு உருவாக்கப்படும் 7 ஜவுளிப் பூங்காக்களுக்கு நிதி உதவி வழப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூங்காவிற்கும் மூலதன உதவியாக 500 கோடி ரூபாய் வரையில் வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு பூங்காவிற்கும் 300 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

வேலை வாய்ப்புகள் அறிவிப்பு

வேலை வாய்ப்புகள் அறிவிப்பு

இந்த பூங்காக்கள் மூலம் 20 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 70,000 கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு முதலீட்டினை தூண்டவும், புதுமைகளை புதுப்பிக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் இது உதவும்.

 பியூஷ் கோயல் கருத்து

பியூஷ் கோயல் கருத்து

இதற்கிடையில் இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா உலகளாவிய ஜவுளி மையமாக மாறுவதற்கான மிகப்பெரிய நடவடிக்கை இது. முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சர்வதேச வாங்குபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த பூங்காக்கள் மூலம் தற்சார்பு இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் என கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM MITRA: Mega textile park in 7 states including Tamil Nadu and Karnataka:

PM MITRA: Mega textile park in 7 states including Tamil Nadu and Karnataka:
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X