மோடி 3.0 மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்து 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் சென்செக்ஸ் 8.2% உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில், பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீட்டில் உள்ள 18 பங்குகள் மல்டிபேக்கர்களாக மாறியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இந்த முறை பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன.
ஆனால் வலுவான கூட்டணி அமைத்து பிரதமர் மோடி ஆட்சியை தக்கவைத்து கொண்டார். அதேவேளையில், வரவு செலவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், நீண்டகால மூலதன ஆதாய வரி அதிகரிப்பால் முதலீட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். மறுபுறம், சமீபத்தில் செபி தலைவர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவை அனைத்தையும் தாண்டி மோடி 3.0 அரசாங்கத்தின் முதல் 100 நாட்களில் சென்செக்ஸ் 6,300 புள்ளிகள் அல்லது 8.2 சதவீதம் லாபத்தைப் பதிவு செய்தது. புதிய சாதனையை எட்டியுள்ளது.மேலும், இந்த காலகட்டத்தில், 18 ஸ்மால் கேப் பங்குகள் மல்டிபேக்கர்களாக மாறி முதலீட்டாளர்களுக்கு லாபத்தை ஈட்டித் தந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த 100 நாட்களில், பிஎஸ்இ ஸ்மால் கேப் இன்டெக்ஸ் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. பிஎஸ்இ ஐடி குறியீடு அதிகபட்சமாக 22 சதவீதம் உயர்ந்துள்ளது. பிஎஸ்இ ஹெல்த் கேர் குறியீடும் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. நுகர்வோர் பொருள்கள் 17 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. மறுபுறம், உலோக குறியீடு 3 சதவீதம் சரிவை பதிவு செய்தது. ரியல் எஸ்டேட் குறியீடு 1 சதவீதம் குறைந்துள்ளது.
மோடி 3.0 காலத்தில் பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீட்டில் குறைந்தது 18 பங்குகள் மல்டிபேக்கர்களாக மாறியுள்ளன. ரெஃபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 100 நாட்களில் அதிகபட்சமாக 221 சதவீதத்தை எட்டியது. பிசி ஜூவல்லர்ஸ் பங்கு 175 சதவீதம் உயர்ந்துள்ளது. பாலு ஃபோர்ஜ் இண்டஸ்ட்ரீஸ் 167 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கிராவிடா இந்தியா 131 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. PG எலக்ட்ரோபிளாஸ்ட் 118 சதவீதமும், காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா 114 சதவீதமும், நியூலேண்ட் லேபரேட்டரீஸ் 103 சதவீதமும் மல்டிபேக்கர் வருமானத்தை வழங்கியுள்ளன.
தற்போதைய சந்தை நிலவரம் குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது ஈக்விட்டி கேபிடல் ஆதாயங்கள் மீதான வரியை அதிகரிக்கவும், கேபெக்ஸ் குறைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நீண்ட காலத்திற்கு, முதலீட்டு அடிப்படையிலான GDP வளர்ச்சியானது பெருநிறுவன வருவாயை அதிகரிக்கும் இதனால் சந்தை ஏற்றத்துடன் இருக்கும் என்று முன்னணி சர்வதேச தரகு நிறுவனமான Jefferies தெரிவித்துள்ளது.
அதேபோல், உள்நாட்டு முதலீடு நிலையான அளவில் குறையலாம் என்றும், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள், மத்திய வங்கி வட்டி விகித முடிவு ஆகியவை சந்தைகளை பாதிக்கும் என்று பிரபுதாஸ் லீலாதர் கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications