பட்ஜெட் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13 வரை தொடரும். 2ஆம் பகுதி இடைவேளைக்குப் பிறகு மார்ச் 10 அன்று இரு அவைகளும் மீண்டும் கூடி, ஏப்ரல் 4 அன்று கூட்டத்தொடர் நிறைவடையும்.
இந்த நிலையில் இன்று காலையில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மக்களிடம் பேசிய நரேந்திர மோடி, "இந்தியாவின் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மகாலட்சுமியின் அருள் தொடர்ந்து பொழிந்திட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்" என்று கூறினார்.

"இந்தியா ஒரு ஜனநாயக நாடாக 75 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது பெருமைக்குரிய விஷயம்" என்றும் அவர் வலியுறுத்தினார். உலகளாவிய அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் அந்தஸ்தைப் பிரதமர் பெருமையுடன் நாட்டு மக்களிடம் எடுத்துரைத்தார்.
இந்தியா சர்வதேச விவகாரங்களில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். இது தனது மூன்றாவது பதவிக் காலத்தின் முதல் முழுமையான பட்ஜெட் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
"இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047 ஆம் ஆண்டில், இந்தியா விக்சித் பாரத் என்ற தனது இலக்கை அடையும். இந்த பட்ஜெட் நாட்டிற்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்று நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் கூறினார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பு பேசிய பிரதமர் மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தின் முக்கிய குறிக்கோள் குறித்தும் பேசினார். இந்த 3வது ஆட்சியில் 'இன்னோவேஷன், இன்கிளுஷன் மற்றும் இன்வெஸ்ட்மென்ட்' பற்றியதாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
இதோடு மத்திய, மாநில அரசுகள் நல்லிணக்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் பேசினார்.
பட்ஜெட்-க்கு முன்பு மோடியின் பேச்சை கேட்டும் போது இந்த பட்ஜெட்டில் ஏழை, நடுத்தர மக்கள், பெண்கள், நாட்டின் வளர்ச்சிக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்று தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் நாளை தாக்கல் செய்யப்பட்டும் பட்ஜெட்டில் இதன் உண்மை தெரியும்.
இந்தியா முழுவதும் அனைத்து தரப்பினரும் வருமான வரி குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கும் வேளையில் பணவீக்கம் ஆதிக்கம், மந்தமான நுகர்வு, ஏற்றுமதியில் தொய்வு என பல பிரச்சனைகள் உள்ளது. இதற்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் வட்டி விகித குறைப்பு சிறந்த தீர்வாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறினாலும் கடைசி தீர்ப்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையில் உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications